ஐ லவ்யூ வேணா சொல்றேன்.. கல்யாணம் பண்ண சொல்லி கம்பல் பண்ணாதீங்க.. கடுப்பான மாளவிகா மோகனன்!

சென்னை: நடிகை மாளவிகா மோகனனின் இந்தி ஆல்பம் பாடலான Tauba வெளியாகி வெற்றிகரமாக பல மில்லியன்களை கடந்து டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில், #AskMalavika எனும் ஹாஷ்டேக்கை போட்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு நேற்று பதில் அளித்தார்.

அப்போது ஒரு ரசிகர் திருமணம் செய்து கொள்ளவீர்களா எனக் கேட்க அதற்கு மாளவிகா மோகனன் சொல்லி உள்ள பதில் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

சான்ஸ் கிடைத்தும்

சான்ஸ் கிடைத்தும்

பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அந்த படத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை என ஃபீல் செய்தவருக்கு மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும், மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அந்த படங்களில் அவர் நடித்த அற்புதமான நடிப்பை சினிமா ரசனையே இல்லாத ரசிகர்களும் பங்கமாக ட்ரோல் செய்ய சென்னைக்கு டாட்டா சொல்லி விட்டு மும்பைக்கு பறந்து விட்டார்.

ஆல்பம் பாடல்

ஆல்பம் பாடல்

இன்ஸ்டாகிராமில் என்ன தான் பிகினி போட்டோ போட்டு கவர்ச்சி காட்டினாலும், படத்தில் புடவையையும், சுடிதாரையும் மாட்டி விட்டு விடுகின்றனர் என நினைத்து வருந்திய மாளவிகா மோகனனுக்கு அவர் இஷ்டத்துக்கு கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு Tauba எனும் ஆல்பம் பாடலில் ஆட வைத்துள்ளனர். அந்த இந்தி ஆல்பம் பாடலில் அவர் நடனமாடியுள்ள வீடியோ டிரெண்டாகி வரும் நிலையில், ரசிகர்களுடன் சாட் செஷனை நேற்று நடத்தினார்.

ரசிகருக்கு ஐ லவ் யூ

ரசிகருக்கு ஐ லவ் யூ

பிரியாணி பிடிக்கும், கும்பகோணம் கோயில் பிடிக்கும், விக்ரம் படம் நல்லா இருந்துச்சு, விஜய்க்கு ஹேப்பி பர்த்டே, அனிருத் இசை பிடிக்கும் என கேஷுவலான கேள்விக்கு பதில் அளித்து வந்த மாளவிகா மோகனனிடம் சில ரசிகர்கள் பெர்ஷனல் கேள்விகளையும் எழுப்ப அதற்கும் கூலாக பதிலளித்தார். ஒரு ரசிகர் ஐ லவ் யூன்னு மட்டும் சொல்லுங்க.. அதை ஃப்ரேம் போட்டு என் பெட்ரூம்ல மாட்டுறேன்னு சொல்ல, உடனடியாக ஐ லவ் யூன்னு சொல்லி அந்த ரசிகரை திக்குமுக்காட செய்தார்.

 பிகினி போட்டோ போடுங்க

பிகினி போட்டோ போடுங்க

மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராம் பக்கம் போனால் அவ்வளவு பிகினி போட்டோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்நிலையில், ரசிகர் ஒருவர் பிகினி போட்டோ போடுங்க என சொன்னதுமே, கோபமாக இருப்பது போன்ற போட்டோவை போட்டு அவரை நோஸ் கட் செய்து விட்டார். இன்னொரு ரசிகர் உம்மா கொடுக்கன்னு கேட்டதும், உடனடியாக உம்மா கொடுத்துவிட்டார்.

திருமணம் பற்றி

திருமணம் பற்றி

இன்னொரு ரசிகர் "என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களா? நான் உங்களை ரொம்ப லவ் பண்றேன்னு கேட்டதற்கு.. அச்சச்சோ.. சோ ஸ்வீட். ஆனால், நான் இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவிலேயே இல்லையே பாஸ் என சொல்ல, அவரும் விஜய்யின் ஐ எம் வெயிட்டிங் ஜிஃப் இமேஜை போட்டு எத்தனை காலம் ஆனாலும் காத்திருக்கிறேன் என பதில் அளித்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X