»   »  'குருவி'யில் வாளமீனு!

'குருவி'யில் வாளமீனு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
விஜய், திரிஷா நடிக்கும் குருவி படத்தில் மாளவிகாவின் மயக்க வைக்கும் குத்துப் பாட்டு இடம் பெறுகிறது.

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி தயாரிக்கும் முதல் படம் குருவி. தரணி இயக்க, விஜய், திரிஷா இதில் நடிக்கின்றனர். திரிஷாவின் அண்ணன் வேடத்தில் முதலில் நடிப்பதாக இருந்த பிரகாஷ் ராஜ் விலகி விட்டதால் தற்போது சிவாஜி வில்லன் சுமன் நடிக்கவுள்ளார்.

குருவி படத்தில் செமத்தியான ஒரு குத்துப் பாட்டு இடம் பெறுகிறது. இந்தப் பாட்டுக்கு மாளவிகா டான்ஸ் ஆடியுள்ளார்.

வாளமீனு பாட்டுக்குப் பிறகு மாளவிகாவின் குத்துப் பாட்டுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் வாளமீனு படத்திற்குப் பிறகு நடிப்புடன் கூடிய வேடங்களை மட்டுமே மாளவிகா தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் குருவி படத்தில் ஒரு குத்துப் பாட்டை வைக்க முடிவு செய்த தரணி, முதலில் ரீமா சென்னை அதற்கு ஆட விட தீர்மானித்தார். ஆனால் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக கால்ஷீட்டை மொத்தமாக கொடுத்து விட்டதால் குருவியில் ஆட அவரால் கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை.

இதையடுத்து மாளவிகாவை போட தீர்மானித்து அவரை அணுகினர். அவரும் சந்தோஷமாக ஒத்துக் கொண்டாராம்.

இதையடுத்து சமீபத்தில் சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இந்தப் பாடலை படம் பிடித்துள்ளனர். விஜய், மாளவிகாவுடன் டான்ஸர்களும் இணைந்து ஆடிய இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்குமாம்.

அஜீத், சூர்யா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துள்ள மாளவிகா விஜய் படத்தில் முதன் முதலாக இடம் பெறுகிறார். அதிலும் குத்துப் பாட்டில் அவருடன் ஆடியுள்ளதைப் பெருமையாக நினைக்கிறாராம்.

இதுகுறித்து மாளவிகா கூறுகையில், குருவி படத்தில் விஜய்யுடன் இணைந்து ஆடியதை மகிழ்ச்சியாக கருதுகிறேன். திருமணத்திற்குப் பிறகு நடிகைகளுக்கு மவுசு போய் விடும் என்று தவறாக நினைக்கிறார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்ததோ, அதேபோலத்தான் இப்போதும் வாய்ப்புகள் வருகின்றன.

திருமணத்திற்கு முன்பு வரை இருந்த அழகு, எப்படி திருமணத்திற்குப் பிறகு காணாமல் போய் விடும் எனத் தெரியவில்லை.

எனது திறமையை நிரூபிக்க வாய்ப்பளித்த விஜய்க்கும், தரணிக்கும் எனது நன்றிகள் என்றார்.

Read more about: malavika trisha vijay

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil