»   »  ஆஸ்தான நடிகையை கைவிட்டார் சந்தானம்... புது ஜோடி வைபவி ஷண்டிலியா!

ஆஸ்தான நடிகையை கைவிட்டார் சந்தானம்... புது ஜோடி வைபவி ஷண்டிலியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனது ஆஸ்தான நடிகை ஆஷ்னா ஜவேரிக்கு பதிலாக புதிய நடிகை வைபவியுடன் ஜோடி சேர்கிறார் நடிகர் சந்தானம்.

இது சர்வர் சுந்தரம் படதுக்காக.

சந்தானம் நாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா ஜவேரி. அடுத்து சந்தானம் நாயகனாக நடிக்கும் இரு படங்களிலும் அவருக்கு ஆஷ்னாதான் ஜோடி.

Marathi actress Vaibavi makes her debut in Santhanam's Server Sundaram

இதனால் இருவருக்கும் காதல் என்று கிசுகிசு கிளம்பியது. அதற்கேற்ப சந்தானமும் ஆஷ்னாவும் ஜோடியாக திருப்பதிக்குப் போய் வந்த படங்களும் வெளியாகின.

இந்த நிலையில் சர்வர் சுந்தரம் படத்தில் நாயகனாக ஒப்பந்தமானார் சந்தானம். ஆனால் இந்தப் படத்தில் அவருக்கு ஆஷ்னா ஜோடியில்லை.

Marathi actress Vaibavi makes her debut in Santhanam's Server Sundaram

மராத்தி நடிகை வைபவி ஷண்டிலியா என்வர்தான் இந்தப் படத்தில் சந்தானத்துடன் நடிக்கிறார். புதிய இயக்குநர் பால்கி இந்தப் படத்தை இயக்குகிறார்.

Marathi actress Vaibavi makes her debut in Santhanam's Server Sundaram

நாயகி வைபவி பற்றி அவர் கூறுகையில், "வைபவியை தமிழில் கதாநாயகியாக அறிமுகம் செய்வதில் நாங்கள் மிக பெருமை அடைகிறோம். மூன்று மாதங்களுக்கு மேலாக நாங்கள் கதாநாயகி தேடி வந்தோம். இந்தக் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் இருந்தது இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துக் கொண்டோம். அவர் பரதத்திலும், கதக் நடனத்திலும் தேர்ந்தவர். அழகும் திறமையும் ஒருங்கிணைந்து இருக்கும் பதுமையான வைபவி ஷண்டிலியா தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் கவர்வார்," என்றார்.

English summary
Vaibhavi shandilya a pretty looking stage artiste from Marathi cinema makes her debut as a heroine opposite Santhanam in 'Server Sundharam' produced by Kenanya films and directed by Balki a debutant.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil