Meena Daughter: மீனா பொண்ணா இது.. தெறி பேபி இப்போ நல்லா வளர்ந்து க்யூட் பிரின்சஸ் ஆகிட்டாங்களே!

சென்னை: நடிகை மீனா சிறு வயதில் இருந்தே பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளங்களில் எப்போதுமே தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். ரஜினிகாந்த் உடன் குழந்தையாக நடித்த மீனா வளர்ந்து எஜமான், முத்து, வீரா என ஹீரோயினாக நடித்த போது ஏகப்பட்ட விமர்சனங்கள் கிளம்பினாலும், தனது நடிப்பால் அனைத்தையுமே அவர் சமாளித்தார்.

அவரது மகள் நைனிகா விஜய்யின் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அட்லீ இயக்கத்தில் நடித்த நிலையில், தொடர்ந்து மீனாவை போலவே நைனிகாவும் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்.

Meena Daughter Nainika Latest look photos goes trending
Photo Credit:

மீனாவின் கணவர் மறைவுக்குப் பிறகு அவரது உலகமாகவே மாறியுள்ள நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தெறி பேபி: அம்மாவை போலவே சினிமாவில் நைனிகா முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை அந்த மழலை கலந்த குரலில் பேசி நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். பலரும் அவரை தெறி பேபி என்றே கொண்டாடினர். அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜய்யுடன் இணைந்து ஈனா மீனா டீக்கா பாடலிலும் செம ஸ்கோர் செய்திருப்பார் நைனிகா.

Meena Daughter Nainika Latest look photos goes trending
Photo Credit:

அம்மாவை போலவே அழகு: குழந்தையாக இருந்த நைனிகா சமீபத்தில் திரையுலகம் சார்பில் அம்மாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா ஒன்றில் பங்கேற்று இருந்தார். அதன் பின்னர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நைனிகா வெளியிட்ட போட்டோக்கள் எல்லாம் வெளியாகி உள்ளன. அம்மாவை போலவே அழகாக மாறிவிட்டாரே நைனிகா என்றும் நல்லா வளர்ந்துவிட்டாரே மகள் என பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

குட்டி பிரின்சஸ்: மீனாவின் குட்டி இளவரசியான நைனிகா ஹாஃப் ஒயிட் டிரெஸ்ஸில் அம்மா அருகே எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார். கூடிய சீக்கிரமே மீண்டும் நைனிகா சினிமாவில் நடிக்க வருவாரா என்றும் தமிழ் சினிமாவுக்கு எதிர்காலத்தில் ஒரு அழகான திறமையான ஹீரோயின் காத்துக் கொண்டிருக்கிறார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். நன்றாக படித்து பெரிய இடத்துக்கு செல்ல வேண்டும் என்றும் ரசிகர்கள் ஆசி வழங்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X