»   »  சுந்தருடன் இணையும் மீனாட்சி!

சுந்தருடன் இணையும் மீனாட்சி!

Subscribe to Oneindia Tamil

கருப்பசாமி நாயகி மீனாட்சியும், வீராப்பு நாயகன் சுந்தர்.சியும், பெருமாள் படத்தில் ஜோடி போடுகின்றனர்.

வங்கம் தந்த தங்க தேவதை மீனாட்சி. தமிழுக்கேற்ற பெயர் மாற்றத்துடன், கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் அசத்தலாக நடித்து அறிமுகமானவர் மீனாட்சி.

முதல் படத்திலேயே நடிப்பிலும், தென்றல் போன்ற கிளாமரிலும் பின்னி எடுத்த மீனாட்சிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் நிறைய வருகிறதாம்.

இப்போதைக்கு சுந்தர்.சியுடன் பெருமாள் படத்தில் ஜோடி போட ஒப்பந்தமாகியுள்ளார். வின்சென்ட் செல்வா படத்தை இயக்குகிறார்.

மீனாட்சி இப்படத்தின் நாயகி என்றாலும் விதிர்க்க வைக்கும் நமீதாவும் இப்படத்தில் இருக்கிறார். அவருக்கு கிளாமர் பகுதியை ஒதுக்கி கிளுகிளுப்பூட்டும் பணியைக் கொடுத்துள்ளனர். சமீபத்தில் கிளாமராக ஒரு பாட்டையும் ஷூட் செய்துள்ளனர்.

இரு நாயகிகளுக்கும் படத்தில் சம பலத்துடன் கூடிய கேரக்டரைக் கொடுத்துள்ளாராம் வின்சென்ட் செல்வா. இருவரும் படத்தின் நாயகிகள்தான். இருவருக்கும் சமமான பாத்திரங்கள். இது ஒரு முக்கோண காதல் கதை. இருப்பினும் நல்ல பொழுதுபோக்குச் சித்திரமாகவும் இருக்கும் என்கிறார் வின்சென்ட் செல்வா.

படத்தின் காமெடி போர்ஷனை விவேக் கையில் எடுத்துள்ளாராம். படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் முடிந்து, இரண்டாவது கட்ட ஷூட்டிங் இந்த வாரத்தில் தொடங்குகிறதாம்.

பெருமாள், பெத்த பெருமாளா இருப்பாரா?

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil