TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
கேரள மாப்பிள்ளையைக் கைப்பிடிக்கிறார் மீரா ஜாஸ்மின்.. மாண்டலின் ராஜேஷ்?
திருவனந்தபுரம்: மாண்டலின் ராஜேஷுடன் காதல், இணைந்து வாழ்வதாக வந்த தகவல் ஆகியவற்றுக்கு மத்தியில் தற்போது கேரளாவைச் சேர்ந்த மலையாள மாப்பிள்ளை ஒருவருடன் நடிகை மீரா ஜாஸ்மினுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.
இவர்களது திருமணம் பிப்ரவரி 12ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள சர்ச்சில் நடக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் மாண்டலின் ராஜேஷுடனான மீராவின் காதல் முறிந்து போய் விட்டது உறுதியாகியுள்ளது.
கேரளத்து மீரா
கேரளாவைச் சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின். பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ரன் மூலம்
தமிழில் ரன் படத்தின் மூலம் அறிமுகமானார் மீரா. பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
இங்க என்ன சொல்லுது
தற்போது இங்க என்ன சொல்லுது என்ற தமிழ்ப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
மாண்டலின் ராஜேஷுடன் காதல்
இவருக்கும், இசைக் கலைஞரான மாண்டலின் ராஜேஷுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் கூட தகவல்கள் கூறின. இருவரும் இணைந்து பல இடங்களுக்கும் போய் வந்தனர்.
கேரளத்து அனில்
ஆனால் தற்போது கேரளத்து அனில் ஜான் டைட்டஸ் என்பவருடன் மீராவுக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. அனில் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்.
பிப்ரவரி 12ல் திருமணம்
அனில் மீரா திருமணம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சர்ச்சில் பிப்ரவரி 12ம் தேதி நடைபெறவுள்ளதாம்.