»   »  'மேயாத மான்' தங்கச்சி இப்போ ஹீரோயின் ஆகியாச்சு!

'மேயாத மான்' தங்கச்சி இப்போ ஹீரோயின் ஆகியாச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'மேயாத மான்' படத்தில் நடித்த இந்துஜா வேலூரைச் சேர்ந்தவர். மீடியாவின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர் 'மேயாத மான்' பட ஆடிஷனில் கலந்துகொண்டு படத்தில் நடிக்கத் தேர்வானார். அதில் ஹீரோயினாக நடித்த ப்ரியா பவானி ஷங்கரை விட இந்துஜா நடித்த கேரக்டர் தான் அதிகம் பேசப்பட்டது.

வைபவின் தங்கையாக கலக்கி இருந்தார் இந்துஜா. நார்த் மெட்ராஸ் பெண்ணாக நைட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு இவர் போட்ட ஆட்டத்தை அனைவரும் ரசித்தனர். இதனால் படம் வெளிவருவதற்கு முன்பே ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது.

Meyadha maan indhuja became heroine

தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்கும் 'பில்லா பாண்டி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் இந்துஜா. இன்னொரு ஹீரோயினாக சாந்தினி நடிக்கிறார். இரண்டாவது படத்திலேயே ஹீரோயின் ஆகி உள்ளார் இந்துஜா.

'மேயாத மான்' படத்தில் சென்னை பெண்ணாக கலக்கியவர் இதில் மதுரைக்காரப் பெண்ணாக கலக்க இருக்கிறார். சுத்த தமிழ் பேசும் இன்னொரு நடிகையாக வளர்ந்து வருகிறார். பில்லா பாண்டி படத்தின் மூலம் நல்லதொரு எதிர்காலத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார் இந்துஜா.

English summary
In the film 'Meyadha Maan' Priya Bhavani Shankar acted as heroine in the film, and vaibhav's sister character played by Indhuja. Indhuja has got the opportunity of the heroine.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X