»   »  ஃபேஸ்புக்காம், ஃபேஸ்புக்கு: தடை விதிக்கக் கோரினால் நான் ஆதரிப்பேன்- நடிகை பூர்ணா

ஃபேஸ்புக்காம், ஃபேஸ்புக்கு: தடை விதிக்கக் கோரினால் நான் ஆதரிப்பேன்- நடிகை பூர்ணா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாள திரையுலகம் தன்னை பலமுறை ஏமாற்றிவிட்டதாக நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த பூர்ணா மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு தமிழ் திரையுலகிற்கு வந்தார். பார்க்க அழகாக இருந்தாலும் பூர்ணாவால் கோலிவுட்டில் ஜொலிக்க முடியவில்லை.

இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து பூர்ணா கூறுகையில்,

மலையாளம்

மலையாளம்

நான் முதலில் மலையாள திரையுலகில் தான் நடிகையாக அறிமுகமானேன். தமிழ், தெலுங்கு படங்கள் போன்று மலையாளத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைப்பது இல்லை.

ஏமாற்றிவிட்டார்கள்

ஏமாற்றிவிட்டார்கள்

மலையாளத்தில் நல்ல கதாபாத்திரம் என்று கூறி சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துவிடுவார்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் மீறக் கூடாதே என்று நானும் நடிப்பேன். இப்படி தான் மலையாள திரையுலகம் என்னை பலமுறை ஏமாற்றிவிட்டது.

வதந்தி

வதந்தி

நான் தெலுங்கு படம் ஒன்றில் பேயாக நடித்தேன். அந்த படத்தை பார்த்து ஒருவர் அதிர்ச்சியில் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரவியது.

கர்ப்பம்

கர்ப்பம்

நான் ஒரு படத்தில் கர்ப்பிணியாக நடித்ததை பார்த்து நான் நிஜமாகவே கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. பொய்யான தகவல்களை பரப்பும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தால் அதை நான் ஆதரிப்பேன்.

திருமணம்

திருமணம்

இந்த ஆண்டே எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று என் குடும்பத்தார் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். என்னையும், என் குடும்பத்தாரையும் நேசிக்கும் ஒருவரே எனக்கு கணவராக வர வேண்டும்.

English summary
Kerala born actress Poorna said that Mollywood has cheated her many times.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil