»   »  கிளம்பிட்டாங்கப்பா.. ராதே மா "வரலாறு" படமாகிறது.. நடிக்கப் போவது "மல்லிகா மா"...!

கிளம்பிட்டாங்கப்பா.. ராதே மா "வரலாறு" படமாகிறது.. நடிக்கப் போவது "மல்லிகா மா"...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா வைத்து படம் பண்ண சிலர் கிளம்பியுள்ளனர். ராதே மா வேடத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கப் போகிறாராம்.

வட இந்தியாவைக் கலக்கி வரும் பெண் சாமியார் ராதே மா. இவர் குறித்து செய்தி வராத நாளே இல்லை இப்போது. இவரைப் பற்றி ஒரு செய்தியாவது தினசரி வந்து விடுகிறது.

வரதட்சணைக் கொடுமைப் புகார், பக்தர்களைக் கட்டிப்பிடிப்பது, முத்தமிட அனுமதிப்பது, தூக்க அனுமதிப்பது, கவர்ச்சி டிரஸ் போட்டுக் கொண்டு டான்ஸ் ஆடுவது என சர்ச்சைகளாக வந்து கொண்டுள்ளன.

ஆம்பளை சாமிக்கு இவர் பரவாயில்லையே பாஸ்!

ஆம்பளை சாமிக்கு இவர் பரவாயில்லையே பாஸ்!

ஆனால் பல ஆண் சாமியார்கள் செய்யும் அராஜக அட்டகாசத்தைப் பார்க்கும்போது இவர் எவ்வளவோ தேவலை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனாலும் "பெண்" ஆச்சே... "சமுதாயம்" அபச்சாரம் அபச்சாரம் என்றுதானே சொல்லும்

படமெடுக்கக் கிளம்பிய சர்மா

படமெடுக்கக் கிளம்பிய சர்மா

இப்போது இந்த பெண் சாமியாரை வைத்து படம் செய்ய கிளம்பியுள்ளது ஒரு குரூப். யாருக்குமே அவ்வளவாகத் தெரியாத ஒரு தயாரிப்பாளர் ரஞ்சீத் சர்மா. இவர்தான் இந்தப் படத்தை தயாரிக்கப் போகிறாராம். அதை அவரே கூறியுள்ளார்.

ராதே மா வேடத்தில் மல்லிகா

ராதே மா வேடத்தில் மல்லிகா

ராதே மா வேடத்தில் நடிக்க மல்லிகா ஷெராவத்தை அணுகியுள்ளாராம். அவரும் பச்சைக் கொடி காட்டி விட்டாராம். இவரே ராதே மா வேடத்தில் நடிப்பாராம்.

ரொம்பப் பழக்கமாம்

ரொம்பப் பழக்கமாம்

என்ன விசேஷம் என்றால் இந்த தயாரிப்பாளர், ஒரு காலத்தில் ராதே மாவுடன் நெருக்கமாக பழகியவராம். இதையம் கூட அவரேதான் சொல்கிறார்.

அவரு டுபாக்கூருங்க

அவரு டுபாக்கூருங்க

ராதே மா ஒரு உண்மையான சாமியாரே கிடையாது. அவர் போலி என்று அடித்துச் சொல்கிறார் இந்த சர்மா. இருந்தாலும் இந்தப் படத்தில் ராதே மாவின் கேரக்டரை அப்படியே காட்டப் போவதாகவும் அவர் கூறுகிறார்.

இவிங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையே சாமி!

English summary
A small time producer in Bollywood has announced that he is going to film the life of Raadhe Maa. The title role will be played by Mallika Sherawat.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil