»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

நடிகை நதியா மீண்டும் வெள்ளித்திரையில் தனது முகத்தைக் காட்ட முடிவு செய்துள்ளார்.

இப்போது 30 வயது முதல் 40 வயதில் இருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் உங்களுக்கு பிடித்த நடிகை யார்என்று கேட்டால் பாதிப்பேர் நதியாவின் பெயரைச் சொல்வார்கள். அந்த அளவிற்கு பத்தாண்டுகளுக்கு முன் தமிழ்சினிமாவைக் கலக்கியவர் அவர்.

கேரளத்தைச் சேர்ந்த இந்த நதியாவின் பெயரில் கொண்டை, பொட்டு, ஜிமிக்கி, சேலைஎன அவர் சினிமாவில்எதை அணிந்து கொண்டு நடித்தாலும் அது அப்போது பேஷனாகியது.

மார்க்கெட்டில் நல்ல இடத்தில் இருக்கும்போதே 1989ல் வெளிநாட்டு வங்கி ஆலோசகராக இருந்தமலையாளத்துக்காரரான சிரீஸ் என்பவரை மணந்து கொண்டு லண்டனில் செட்டிலானார். இரண்டு பெண்குழந்தைகளுக்குத் தாயாரான அவர், அமெரிக்கன் பிராட்காஸ்டிங் நிறுவனத்திலும் பின்னர் லண்டன் பிபிசிரேடியோவிலும் பணிபுரிந்தார்.

இடையில் பிரபுக்கு ஜோடியாக ராஜகுமாரன் படத்தில் தலைகாட்டினார். அப்போது வீசிய குஷ்பு அலையைச்சமாளிக்க முடியாமல் மீண்டும் லண்டனுக்கு மூட்டை கட்டினார்.

பின்னர் வந்த தொலைக்காட்சித் தொடர் வாய்ப்புகளையும், எனக்கு 20 உனக்கு 18 பட வாய்ப்பையும் மறுத்தார்.இந் நிலையில் ஒரு மாத விடுமுறையில் சென்னைக்கு வரும் நதியா நுங்கம்பாக்கத்தில் ஒரு வீடு பிடித்து தங்கப்போகிறார்.

அப்படியே மலையாளப் படமொன்றில் நடிக்கவிருக்கிறார். தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்கவும்திட்டமிட்டுள்ளார்.

மீண்டும் ஹீரோயின் வேடம் தான் வேண்டும் என்று அடம்பிடிக்காமல் இருந்தால் சரி, இந்த நதியா ஆண்ட்டி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil