»   »  ஹீரோயினை விஷப்பூச்சி கடிச்சிடுச்சிப்பா!

ஹீரோயினை விஷப்பூச்சி கடிச்சிடுச்சிப்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நாடோடி கனவு... இந்தப் பெயரில் ஒரு புதுப் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆர்.ஆர்.ஆர். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.ராஜேந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தில் நாயகனாக மாஸ்டர் மகேந்திரன் - நாயகியாக சுப்ரஜா நடிக்கிறார்கள்.

சபேஷ் முரளி இசையமைத்துள்ள இப்படத்தை வீர செல்வா இயக்கியுள்ளார். ராகுல் இணை தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிஜு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Nadodi Kanavu in final stage

பொதுவாக ஒரு கிராமத்தில் தவறு செய்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பார்கள். அதுபோல் காதலர்களையும் ஊர் மக்கள் ஒதுக்கி வைப்பார்கள். ஆனால், இந்த படத்தில் காதலர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால், ஊர் மக்கள் அனைவரும் ஊரைக் காலி செய்கிறார்கள். எதற்காக இப்படிப்பட்ட சூழ்நிலை என்பதுதான் படம்.

Nadodi Kanavu in final stage

இப்படத்துக்காக 'கருத்த மச்சான்...' என்ற பாடல் படப்பிடிப்பின் போது, கதாநாயகி சுப்ரஜாவை விஷப்பூச்சி ஒன்று கடித்து உடல் முழுவதும் அலர்ஜி ஏற்பட்டுவிட்டதாம். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்துள்ளார்கள். சில நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர் கூறியும், மருத்துவமனையில் இருந்து திரும்பிய உடனே, மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு, க்ளிசரின் இல்லாமலேயே தயாரிப்பாளர் - இயக்குநர் கண்களில் நீர் வரவைத்திருக்கிறார்.

Nadodi Kanavu in final stage

இப்படத்தின் படப்பிடிப்பு பரமக்குடி, சிவகங்கை மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது. செப்டம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

Nadodi Kanavu in final stage
English summary
In Nadodi Kanavu shooting, heroine Supraja was bitten by a poisonous insect

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil