»   »  நமீதா டூ பீஸ் - மனசு பீஸ் பீஸ்!

நமீதா டூ பீஸ் - மனசு பீஸ் பீஸ்!

Subscribe to Oneindia Tamil

6.2 அடி சூரத் குதிரை நமீதாவை, டூ பீஸ் டிரஸ்ஸில் பார்த்தால் எப்படி இருக்கும். அதைப் பார்க்க கெட்டவனுக்காக காத்திருக்க வேண்டும்.

கவர்ச்சிக்கும், நமீதாவுக்கும் ரொம்ப தொலைவு இல்லை. கவர்ச்சி காட்டாமல் நடித்த படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட நமீதாவை படு ஓப்பன் கிளாமரில் தனது கெட்டவன் படத்தில் சிம்பு நடிக்க வைத்துள்ளாராம்.

வல்லவனுக்குப் பிறகு கெட்டவனாகியுள்ள சிம்பு, இப்படத்தில் நமீதாவை நடிக்க வைத்துள்ளார். நமீதாவும் இதுவரை இல்லாத அளவுக்கு தடபுடலாக கிளாமர் காட்டி திக்குமுக்காட வைத்துள்ளாராம்.

கெட்டவனில் நமீதா நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்தபோதே, அப்படீன்னா அது நிச்சயம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே எல்லாம் நல்லபடியாக நடந்து வருகிறதாம்.

டூ பீஸ் டிரஸ் உள்பட விதம் விதமான கிளாமர் காஸ்ட்யூமில் படம் முழுக்க வருகிறாராம் நமீதா. அதிலும் டூ பீஸ் டிரஸ்ஸில் படு கிளாமராக தோன்றுகிறாராம்.

இதற்கு முன்பு நடித்த படங்களில் கிளாமராக நடித்திருந்தாலும் கூட, கிளாமர் டிரஸ்ஸில் இதுவரை நமீதா நடித்ததில்லை. எனவே முதல் முறையாக டூ பிஸ் டிரஸ்ஸில் படு சூப்பராக ஜமாய்த்துள்ளாராம் நமீதா.

ஆனால் நமீதா ஸ்விம் சூட்டில் நடிப்பதில் பெரிய விசேஷம் ஏதுமில்லை என்கிறார் சிம்பு. இதுகுறித்து அவர் கூறுகையில், இதெல்லாம் பத்திரிக்கைகள் கிளப்பி விடும் பரபரப்பு. நமீதா ஸ்விஸ் சூட்டில் வருவதில் என்ன விசேஷம் இருக்கிறது என்று தெரியவில்லை.

இதுபோல இன்னும் பல பரபரப்பான செய்திகள் வரும் என்று நானும் எதிர்பார்க்கிறேன் என்றார் சிம்பு.

நமீதா ஸ்விம் சூட்டு, அதிருது ஹார்ட் பீட்டு!

பி.கு. பி.வாசுவின் இயக்கத்தில், கமல் நடிக்கவுள்ள புதிய படத்தில் நமீதாவும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அப்படீன்னா அதுவும் நிச்சயம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil