»   »  நமீதாவின் யோகா மோகம்!!

நமீதாவின் யோகா மோகம்!!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
இனி யாராவது கேட்டால் 'என் மேனி அழகின் ரகசியம் யோகா' என்று கொஞ்சு தமிழில் பதிலளிக்கப் போகிறார் தமிழ் சினிமாவின் 'ஜம்போ' அழகி நமீதா.

நாளொரு சைஸில் மாறிக் கொண்டடே போகும் தனது உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல சிகிச்சை முறைகளைக் கையாண்டு பார்த்த நமீதா, தனது நண்பர்கள் மற்றும் சக கலைஞர்களின் ஆலோசனைப்படி இப்போது யோகாவுக்கு மாறியிருக்கிறார்.

இதற்காக ஒரு யோகா மாஸ்டரையும் நியமித்துள்ளார். (பெருமூச்சு வேண்டாம்.. பெண் பயிற்சியாளர்தான்!). யோகா கற்று வரும் நமீதா, இப்போது தனது உடலும் மனமும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகக் கூறுகிறார்.

"யோகா ஒரு அற்புதமான சிகிச்சை. உடலையும் மனதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள இதைவிட சிறந்த சிகிச்சை இல்லை. உடற்பயிற்சி செய்யக்கூட நேரமில்லாத அளவுக்கு எப்போதும் ஓடிக் கொண்டடேயிருக்கும் என் போன்றவர்களுக்கு யோகாதான் சிறந்த மருந்து... முன்பெல்லாம் அதிக நேரம் தூங்குவதுதான் எனது விருப்பமான பொழுதுபோக்காக இருந்தது. இப்போது அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டு விட்டேன்..." என்கிறார் நமீதா.

பெரிதாகப் பேசப்பட்ட அழகிய தமிழ் மகனில் ஒரு 'பிட் ரோலில்' வந்து போனது குறித்து கேட்டால், விஜய் படத்தில் நானும் நடித்தேன் என்பதே பெருமைதானே என்கிறார் நமீதா.

பொழச்சுக்குவார்...

Read more about: namitha
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil