»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சிவாஜியின் பேரன் துஷ்யந்துடன் நடித்த நேரமோ என்னவோ தமிழில் சுத்தமாக வாய்ப்புக்களே இல்லாமல்போய்விட்டது நந்தனாவுக்கு.

இதனால் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு சொந்த ஊரான திருவனந்தபுரத்துக்கே போய்விட்டார். அங்குபோய் மீண்டும் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

துஷ்யந்துக்கு ஜோடியாக சக்ஸஸ் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு கொண்டு வரப்பட்டார் நந்தனா. ஆனால், படம்படு பிளாப். இதற்கு முக்கிய காரணமாக துஷ்யந்தைத் தான் சொன்னார்கள். நடிக்கவும் தெரியாமல் ஆடவும்தெரியாமல் கேமரா முன் சோதாவாக வந்து நின்று படம் பார்த்தவர்களை எரிச்சலூட்டினார்.

இந்தப் படம் தோற்றாலும் நந்தானாவுக்கு வாய்ப்புக்கள் வந்தன. ஆனால், அப்படி நடிக்க மாட்டேன், இப்படிநடிக்க மாட்டேன் என இவர் போட்ட கண்டிஷன்களால் வந்த வாய்ப்புகள் எல்லாம் அதே வேகத்தில்திரும்பியோடி விட்டன.

இருந்தாலும் தான் நினைத்தபடி ரோல் கிடைக்கும் என்று நம்பி உயர்ந்த ரக ஹோட்டல் ஒன்றில் சொந்தக் காசில்ரூம் போட்டு காத்துக் கிடந்தார் நந்தானா. ஆனால், இவரை புக் செய்தவர்கள் கூட சூட்டிங்குக்கு அழைக்கவில்லை.

இதையடுத்து விட்டுக் கொடுத்து நடிக்கத் தயார் என்று தயாரிப்பாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் போன் மேல்போன் போட்டு கெஞ்சிப் பார்த்தார். ஒருவரும் சீண்டவில்லைஇதனால் நொந்து போன நந்தனா மெட்ராசுக்கு கும்பிடு போட்டுவிட்டு ஊருக்குப் போய்விட்டார்.

தமிழில் இந்த ரோல் செய்ய மாட்டேன், அந்த ரோல் செய்ய மாட்டேன் என வசனம் பேசிய நந்தனா கேரளாவில்மட்டும் போய் என்ன ரோல் கொடுத்தாலும் செய்ய ஆரம்பித்துள்ளார். இப்போது இளம் விதவை ரோலில் ஒருபடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil