»   »  இரண்டாவது முறையாக நந்தி விருது பெறுகிறார் அனுஷ்கா!

இரண்டாவது முறையாக நந்தி விருது பெறுகிறார் அனுஷ்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐதராபாத் : தெலுங்கு மொழித் திரைப்படம், தொலைக்காட்சி, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்த கலைஞர்களுக்கு நந்தி விருது அளிக்கப்படுகிறது. தற்போது 2014, 2015, 2016-ம் ஆண்டுகளுக்கான விருதுகளை ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

2015-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் விருதைத் தட்டிச் சென்றுள்ளது 'பாகுபலி' திரைப்படம். இயக்குனர் ராஜமௌலி 2014-ம் ஆண்டின் சிறந்த இயக்குனருக்கான பி.என்.ரெட்டி மாநில விருதைப் பெறுகிறார்.

Nandi award for Anushka shetty

2015-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான நந்தி விருதை அனுஷ்கா ஷெட்டி பெறுகிறார். 'சைஸ் ஸீரோ' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அனுஷ்காவுக்கு விருது வழங்கப்படுகிறது.

அனுஷ்கா நந்தி விருது பெறுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே 'அருந்ததி' படத்தில் நடித்ததற்காக 2009-ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான ஸ்பெஷல் ஜூரி விருது பெற்றிருக்கிறார் அனுஷ்கா.

இரண்டாவது முறையாக நந்தி விருது பெறும் அனுஷ்காவை திரையுலகினரும், அவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகிறார்கள். சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அனுஷ்காவுக்கு இந்த விருது அறிவிப்பு செம ட்ரீட்.

English summary
Nandi Awards are given for Best Artists of Telugu Language films. Anushka Shetty gets Nandi Award 2015 for Best Actress for 'Size Zero' movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil