»   »  கன்னடத்தில் நவ்யா!

கன்னடத்தில் நவ்யா!

Subscribe to Oneindia Tamil

தமிழ் மார்க்கெட் தள்ளாட்டம் ஆகி விட்டதால் கன்னடத்தின் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளார் நவ்யா நாயர்.

மலையாளத்தில் பிசியாக இருந்தவர் நவ்யா நாயர். அங்கு மார்க்கெட்டில் ஆட்டம் காணப்பட்டதால் தமிழுக்கு வந்தார். அழகிய தீயே மூலம் வந்த அவருக்கு சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி பெரும் பெயர் வாங்கிக் கொடுத்தது.

தொடர்ந்து பிசியாக நடிக்க ஆரம்பித்த நவ்யாவுக்கு மாயக்கண்ணாடி மூலம் சரியான பிரேக் போடப்பட்டு விட்டது. இப்படம் சேரனுக்கு மட்டுமல்லாது நவ்யா நாயருக்கும் கூட பேரிடியாக அமைந்து விட்டது.

மாயக்கண்ணாடி கொடுத்த தோல்வியால் மனம் சோர்ந்த நவ்யா நாயர், பெரும் அப்செட்டாகியுள்ளார். இதனால் தற்போதைக்கு தமிழில் கேப் கொடுக்க முடிவு செய்துள்ள நவ்யா கன்னட திரையுலகை தேர்வு செய்துள்ளார்.

கஜா என்ற கன்னடப் படத்தில் நடிக்க புக் ஆகியுள்ள நவ்யா இதற்காக பெங்களூரில் முகாமிட்டுள்ளார். நான் நடித்த படங்கள் பெரும்பாலும் திரைப்பட விழாக்களில் திரையிடப்படும். அதில் எனக்கு நிறையப் பெருமை உண்டு.

இப்போது நான் நடிக்கவுள்ள கஜா படமும் எனக்குப் பெயர் வாங்கிக் கொடுக்கும். கன்னட மக்கள் என்னையும் அங்கீகரித்து ஏற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக தன்னம்பிக்கையுடன் கூறுகிறார்.

நவ்யாவின் நம்பிக்கை வெல்லட்டும்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil