»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேரளத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் நவ்யா நாயர், தமிழில் காலடி எடுத்து வைக்கிறார்.

கிட்டத்தட்ட 20 மலையாளப் படங்களில் நடித்துவிட்டார். இப்போது அங்கு இவர் தான் முன்னணி ஹீரோயின்.கையில் ஏகப்பட்ட சான்ஸ்கள். படு பயங்கர பிஸி.

இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு தமிழை நோக்கி இவர் ஓடி வரக் காரணம், உங்களுக்குத் தான்தெரியுமே, பணம். கேரளத்தில் ஒரு படத்துக்கு ரூ. 2 லட்சம் தருகிறார்கள். தமிழில் ஒரு படம் ஓடிவிட்டால் போதும்சம்பளத்தை ரூ. 25 லட்சம் ஆக்கிவிடலாம் (சமீபத்திய உதாரணங்கள், மீரா ஜாஸ்மீன் மற்றும் திரிஷா) என்பதால்ஏகப்பட்ட ஆர்வத்துடன் கோடம்பாக்கத்தில் நுழைந்திருக்கிறார்.

இவரை அங்கிருந்து இழுத்து வந்திருப்பவர் பிரகாஷ் ராஜ். வழக்கமாக கன்னடத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஊரில்இருந்து தான் ஆட்களை இழுத்து வருவார்கள். ஆனால், பிரகாஷ் வித்தியாசமானவர் என்பதைக் காட்டிவிட்டார்.திறமையாளர்கள் எங்கிருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளும் இவர், இப்போது கேரளத்தில் இருந்து நவ்யாவைக்கொண்டு வருகிறார்.

இவர் தயாரித்து இயக்கப் போகும் கூத்துப்பட்டறை படத்தில் நாயகி நவ்யா தான். ஹீரோ பிரசன்னாவாம்.

முறையாக பரதம் பயின்றவராம், இதனால் டான்சில் கலக்குகிறார். பிரகாஷ் ராஜிடம் கவர்ச்சிக்கும் ஓ.கே. சொல்லிஇருக்கிறாராம். இதனால் தமிழில் தேறிவிடுவார் என்கிறார்கள்.

இதுவும் ஒரு காதல் கதை தானாம். ஆனால், ஒரு நடுத்தரக் குடும்பத்து காதல் கதையாம்.

நள தமயந்திக்கு மியூசிக் போட்ட ரமேஷ் வினாயகம் தான் இதில் இசை. அடுத்த வாரம் சூட்டிங் தொடங்குகிறது.

நவ்யா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?

புதியவள்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil