For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நவ்யா என்றொரு அமிர்தம்

  By Staff
  |

  ஐயர் ஆத்துப் பெண் வேடத்தில் நவ்யா அத்தனை அழகாக இருக்கிறார்.

  அழகியே தீயேக்குப் பிறகு ரஜினிக்கு ஜோடியாய் சந்திரமுகியில் நடிக்கப் போகிறார் என்று பி.வாசு தரப்பில் சொல்லப்பட்டாலும்இப்போது அது இல்லை என்றாகிவிட்டது. ரஜினிக்கு ஜோடியாக கேரளத்தின் நயனதாரா தான் நடிக்கிறார். சூட்டிங் ஹைதராபாத்பிலிம் சிட்டியில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

  ரஜினியுடனான வாய்ப்பு பறிபோனதால் நவ்யா சோர்ந்திடவில்லை. அமிர்தம் என்ற ஒரு அழகிய படத்தில் நடிக்கஆரம்பித்திருக்கிறார். இதில் அவருக்கு

  பாரதிராஜா, பாலசந்தர் ஆகிய இயக்குனர் இமயம், சிகரங்களுடன் வசனகர்த்தாவாகப் பணியாற்றிய கண்ணன் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். வேதம் புதிது படத்தில் ஐயர் வீட்டுப் பெண்ணுக்கும், தேவர் சமூக பையனுக்கும் இடையிலான காதலைமையமாக வைத்து ஜாதி எதிர்ப்பு வசனங்களை சுடச்சுட எழுதினாரே அந்தக் கண்ணன் தான் இவர்.

  சத்யராஜ், இளையராஜா, பாரதிராஜாவோடு வசனங்களுக்காகவே அந்தப் படம் நெடுநாள் நம் நினைவுகளில் நின்றுவிட்டுப்போனது.

  சுமார் 60க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிவிட்டு சின்னத் திரைக்குப் போனவர், அங்கு அண்ணி, சஹானா ஆகிய மெகாசீரியல்களுக்கு வசனங்களைத் தீட்டி வென்றுவிட்டு மீண்டும் சினிமா பக்கம வந்திருக்கிறார்.

  இப்போது அமிர்தம் (அனைவருக்கும்) என்ற வித்தியாசமான டைட்டிலில் தானே தயாரித்து இயக்க இருக்கிறார்.

  பாரம்பரியமான ஐயர் வீட்டுப் பெண்ணுக்கும், கடவுள் நம்பிக்கை அறவே இல்லாத ஒரு இளைஞனுக்கும் (புதுமுகம் கணேஷ்)இடையே எட்டிப் பார்க்கும் அபூர்வ காதலை மையமாய் வைத்து இந்தக் கதையை இழைத்திருக்கிறார் கண்ணன்.

  அக்ரஹாரத்துப் பெண்ணாக நவ்யா நாயரும், அவரது தந்தையாக கிரிஷ் கர்னாடும் நடிக்கின்றனர். காதலனால் அந்தப் பெண்எப்படி கட்டுப்பெட்டித்தனத்தை உடைத்துக் கொண்டு வெளியே வருகிறாள் என்பதே கதை.

  படத்தில் சீதாவும் அய்யர் மாமியாக வருகிறார். அவரது கணவராக ராஜிவ் நடிக்கிறார். இதில் அவருக்கு நாதஸ்வர வித்வான்வேடம்.

  படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைக்கத் திட்டமிடப்பட்டதாம். ஆனால், அவர் உலக இசைப் பயணம் புறப்படுவதால்பொறுப்பை மகள் பவதாரிணியிடம் தந்திருக்கிறார்.

  படப்பிடிப்பு மைசூர் அருகே உள்ள மேல்கோட்டை, பத்ராசலம் ஆகிய இடங்களில் உள்ள ஒரிஜினல் அக்ரஹாரங்களில் நடக்கஇருக்கிறதாம்.

  அழகியே தீயே படத்துக்குப் பிறகு ஏகப்பட்ட டைரக்டர்களிடம் கதை கேட்ட நவ்யா எதிலுமே நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். ஆனால், கண்ணன் சொன்ன கதையில் சொக்கிப் போய் உடனே சம்பள விஷயம் கூட பேசாமல் நடிக்கஒப்புக் கொண்டாராம். (சந்திரமுகி சான்ஸ் கூடி வந்திருந்தால் சம்மதிருப்பாரா?).

  படத்திற்காக சமீபத்தில் ஸ்டில் செஷன் நடத்தினார்கள். இதில், போஸ் கொடுக்க வந்த நவ்யா, கர்னாட், ராஜிவ், சீதா எனஅனைவரும் ஒரிஜினல் அக்ரஹாரத்துக்கு ஆட்களாகவே மாறிப் போனார்களாம். படத்திலும் இதே மாதிரி அசரடிக்கட்டும்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X