»   »  தெலுங்கு 'நாயகி'யால் நொந்து நூடுல்ஸான திரிஷா!

தெலுங்கு 'நாயகி'யால் நொந்து நூடுல்ஸான திரிஷா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கில் வெளியான 'நாயகி' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால் நடிகை திரிஷா மிகவும் நொந்து போயிருக்கிறாராம்.

கணேஷ் வெங்கட்ராம், திரிஷா நடிப்பில் 2 நாட்களுக்கு முன் தெலுங்கில் வெளியான படம் 'நாயகி'. திரிஷாவை மையமாக வைத்து இக்கதையை இயக்குநர் கோவி உருவாக்கியிருந்தார்.

பர்ஸ்ட் லுக், பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் இருந்த படக்குழு தற்போது வருத்தத்தில் இருக்கிறதாம். 2 நாட்களுக்கு முன் தெலுங்கில் வெளியான நாயகிக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லையாம்.

Nayaki not Received well in Telugu

இதுதான் படக்குழுவின் வருத்திற்குக் காரணமாம். குறிப்பாக திரிஷாவுக்கு தெலுங்கில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டதாகக் கூறுகிறார்கள்.

இதனால் நயன்தாரா போல சோலோ ஹீரோயினாக வலம் வரலாம் என்று எண்ணிய திரிஷா தற்போது சோகத்துடன் இருக்கிறாராம்.தமிழில் ஜூலை 15ம் தேதி வெளியாகவிருந்த 'நாயகி' ரஜினியின் 'கபாலி' காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

English summary
Trisha's Nayaki Poor Performance in Telugu Box Office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil