»   »  மோடியால் அதிரடி முடிவு எடுத்த நயன், அனுஷ்கா: தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி

மோடியால் அதிரடி முடிவு எடுத்த நயன், அனுஷ்கா: தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மோடியின் மாஸ்டர்ஸ்ட்ரோக்கை அடுத்து நயன்தாரா, அனுஷ்கா போடும் நிபந்தனையால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்நிலையில் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நயன்தாராவும், அனுஷ்காவும் புதிதாக நிபந்தனை விதிக்கிறார்களாம்.

Nayanthara, Anushka take Modi's announcement serious

நயன்தாரா ஒரு படத்திற்கு ரூ.3 முதல் 4 கோடி சம்பளம் வாங்குகிறார். அனுஷ்கா படம் ஒன்றுக்கு ரூ.2 முதல் ரூ.2.5 கோடி சம்பவளம் பெறுகிறார்.

மோடியின் அறிவிப்பை அடுத்து நயன்தாராவும், அனுஷ்காவும் வரி கட்டிவிட்டு தங்களது சம்பளத்தை முழுவதும் வெள்ளையாக கொடுக்குமாறு தயாரிப்பாளர்களை கேட்கிறார்களாம்.

இது என்ன இந்த இரண்டு பேரும் இப்படி கிளம்பிட்டாங்க என்று தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.

English summary
After PM Modi's surgical strike on black money, Nayanthara and Anushka reportedly want their salary after deducting tax.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil