நயன்தாராவுடன் தீபாவளி கொண்டாடிய சிரஞ்சீவி.. கையில் என்ன பரிசு கொடுத்துருக்காரு பாருங்க!

ஹைதராபாத்: மெகாஸ்டார் சிரஞ்சீவி இந்த தீபாவளி பண்டிகையை ஏகப்பட்ட பிரபலங்களுடன் கொண்டாடியுள்ளார். நாகார்ஜுனா, வெங்கடேஷ் மற்றும் நயன்தாரா உள்ளிட்டோருடன் அவர் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், அவர்களுக்கு தீபாவளி பரிசும் வழங்கியுள்ளார்.

சிரஞ்சீயின் புதிய படமான 'மன சங்கர வர பிரசாத் கரு' (MSG) திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தீபாவளியை முன்னிட்டு அந்த படத்தின் போஸ்டரை வெளியிட்ட சிரஞ்சீவி அந்த படத்தில் நடித்தவர்களுடன் தீபாவளியும் கொண்டாடியுள்ளார்.

Nayanthara Celebrates Diwali with Chiranjeevi and she will soon deliver a big treat to Pongal 2026
Photo Credit:

இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கும் இந்தப் படம் ஒரு குடும்ப பொழுதுபோக்குப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போஸ்டருடன், சிரஞ்சீவி தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

பொங்கலுக்கு சிரஞ்சீவி - நயன்தாரா படம்: தமிழில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் சம்மருக்கு வெளியாகவுள்ள நிலையில், பொங்கலுக்கு சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடித்துள்ள படம் வெளியாக காத்திருக்கிறது. சிரஞ்சீவி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "அனைவருக்கும் பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் வளமான தீபாவளி வாழ்த்துக்கள். இந்தத் திருவிழா உங்கள் இதயங்களில் அன்பையும், உங்கள் முயற்சிகளில் வெற்றியையும், உங்கள் வீடுகளில் மகிழ்ச்சியையும் கொண்டுவரட்டும்" என்று பதிவிட்டுள்ளார். இந்த வாழ்த்துச் செய்தியுடன், அவர் புதிய போஸ்டரையும் வெளியிட்டார். ஏற்கனவே நயன்தாரா மற்றும் சிரஞ்சீவி நடித்த பாடல் ஒன்று வெளியாகி பாராட்டுக்களையும் ட்ரோல்களையும் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி வாழ்த்து: போஸ்டரில், சிரஞ்சீவி இளமையான தோற்றத்தில் மிளிர்கிறார். அவர் ஒரு வெளிர் பச்சை நிற ஹூட் ஜாக்கெட்டையும், வெள்ளை டி-ஷர்ட்டையும், பொருத்தமான பேண்ட்டையும் அணிந்துள்ளார். அவர் ஒரு பளபளப்பான சைக்கிளை ஓட்டிக்கொண்டு, புன்னகை பூத்த முகத்துடன் இருக்கிறார். ஸ்டைலான கண்ணாடி மற்றும் நேர்த்தியாக வெட்டப்பட்ட தாடியுடன், அவர் கவர்ச்சியுடனும், உற்சாகத்துடனும் காணப்படுகிறார். போஸ்டரின் மகிழ்ச்சியான சூழலை மேலும் மெருகூட்டும் விதமாக, ஒரு பள்ளி மாணவியும், ஒரு சிறுவனும் அவருடன் சைக்கிள் ஓட்டுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மனதை நெகிழ வைக்கும் குடும்பப் பாங்கான சூழ்நிலையை உருவாக்குகிறது.

Nayanthara Celebrates Diwali with Chiranjeevi and she will soon deliver a big treat to Pongal 2026
Photo Credit:

நாகார்ஜுனா முதல் நயன்தாரா வரை: இந்த தீபாவளியை திரையுலக பிரபலங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார் சிரஞ்சீவி. நடிகர்கள் நாகார்ஜுனா, வெங்கடேஷ் உள்ளிட்டோரின் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய சிரஞ்சீவி பரிசுகளையும் வழங்கினார். மேலும், நடிகை நயன்தாராவுடனும் தீபாவளி கொண்டாடினார்.

நயன்தாராவுக்கு பரிசு: நடிகை நயன்தாராவுக்கு பெரிய சங்கு ஒன்றை பரிசாக சிரஞ்சீவி கொடுத்துள்ளார். சிரஞ்சீவியுடன் பல படங்களில் நடித்துள்ள நயன்தாரா மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ள படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த ஆண்டு வெங்கடேஷ், மீனாட்சி சவுத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த குடும்ப படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த நிலையில், சிரஞ்சீவியின் படமும் பிளாக்பஸ்டர் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சங்கராந்தி ட்ரீட்: 'மன சங்கர வர பிரசாத் கரு' திரைப்படம், அனில் ரவிபுடி மற்றும் சிரஞ்சீவி ஆகியோரின் முதல் கூட்டணியாகும். இப்படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ளார். அண்மையில், விஜய் போலங்கி ஒரு துடிப்பான நடனக் காட்சியை வடிவமைத்துள்ளார். தொழில்நுட்பக் குழுவில், சமீர் ரெட்டி ஒளிப்பதிவாளராகவும், தம்மி ராஜு படத்தொகுப்பாளராகவும், ஏ.எஸ். பிரகாஷ் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர். எஸ். கிருஷ்ணா மற்றும் ஜி. ஆதி நாராயணா ஆகியோர் திரைக்கதையை எழுதியுள்ளனர், கிருஷ்ணா நிர்வாக தயாரிப்பாளராகவும் செயல்பட்டுள்ளார்.

ஷைன் ஸ்கிரீன்ஸ் சார்பில் சாஹு கராபதி தயாரிக்கும் இப்படத்தை சுஷ்மிதா கொனிடேலாவின் கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இணைந்து தயாரிக்கிறது. திருமதி. அர்ச்சனா வழங்கும் 'மன சங்கர வர பிரசாத் கரு' ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்குப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் 2026 சங்கராந்திக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X