பேசிய சம்பளத்தைத் தராததால், சிம்பு படத்துக்கு 'டிமிக்கி' கொடுத்த நயன்தாரா!
சென்னை: பேசியபடி கூடுதல் சம்பளம் தராததால் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் மேற்கொண்டு நடிக்காமல் தாமதம் செய்கிறாராம் நயன்தாரா.
ஒரு காலத்தில் ஹாட் லவ்வர்ஸாகத் திகழ்ந்தவர்கள் சிம்புவும் நயன்தாராவும்.
பின்னர் டாமரென்று உடைந்தது இவர்கள் காதல். அதன் பிறகு சிம்பு வேறொரு காதலில் விழுந்து, அதுவும் டமாராகிவிட்டது.
இப்போது நயன்தாராவுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆரம்பித்துள்ளார். அந்தப் படம்தான் இது நம்ம ஆளு.
இந்தப் படத்தில் நடிக்க நயன்தாரா போட்ட கண்டிஷன், வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட 30 சதவீதம் கூடுதல் சம்பளம் வேண்டும் என்பதுதான்.
இதற்கு ஒப்புக் கொண்ட பிறகுதான், நயன்தாரா நடிக்கவே ஒப்புக் கொண்டாராம்.
ஆனால் பேசியபடி அந்த கூடுதல் தொகையைத் தர இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ சிம்பு யாருமே தயாராக இல்லையாம்.
இதனால் கடுப்பான நயன்தாரா, 'கைல காசு வாயில தோச..' பாலிசிதான் சரிப்படும் என்ற நினைப்பில் படப்பிடிப்புக்கே போகாமல் நிற்கிறாராம். இயக்குநர் பாண்டிராஜுக்கு என்ன செய்வதென்றே புரியாமல் தவிக்கிறாராம்.


Click it and Unblock the Notifications












