»   »  விஜய் ஜோடியாகும் நயனதாரா!

விஜய் ஜோடியாகும் நயனதாரா!

Subscribe to Oneindia Tamil

உதயநிதி தயாரிக்க, தரணி இயக்க, விஜய் நடிக்கவுள்ள குருவி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயனதாரா நடிக்கவுள்ளார். இதன் மூலம் திரிஷாவுக்கான இறுதிக் கதவும் சாத்தப்பட்டு விட்டது.

விஜய் நடிக்கவுள்ள குருவி படத்தின் கலைஞர்கள் குறித்த விவரம் அதிகாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது. அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி தயாரிக்கும் முதல் படம் இது.

இப்படத்தை தரணி இயக்கவுள்ளார். முதலில் திரிஷாதான் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் திடீரென விஜய்க்கும், திரிஷாவுக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டு விட்டதால் நாயகியை மாற்றும்படி கூறி விட்டார் விஜய்.

விஜய்யையும், திரிஷாவையும் சமாதானப்படுத்த தரணி கடுமையாக முயன்றார். ஆனால் முடியவில்லை. இந்த நிலையில் தற்போது விஜய்க்கு ஜோடியாக நயனதாரா நடிக்கவுள்ளார்.

நயனதாரா நடிப்பதை தரணி உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விஜய் நடிக்க நான் இயக்கும் குருவி படத்தில் நயனதாரா நடிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக அவர் நடிக்கிறார். படத்தின் இதர விவரங்களை விரைவில் வெளியிடவுள்ளோம் என்றார்.

இந்த செய்தியை நயனதாராவும் உறுதி செய்துள்ளார். குருவி படத்தில் நான் நடிப்பது உண்மைதான். தற்போது யாரடி நீ மோகினி, பில்லா ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். செப்டம்பரில் இந்தப் படங்கள் முடியவுள்ளது. அதன் பின்னர் விஜ்ய படத்தில் நடிக்கவுள்ளேன்.

குருவி படத்துக்காக ஒட்டுமொத்தமாக கால்ஷீட் கொடுத்துள்ளேன். இந்தப் படம் எனது திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம். எனவேதான் கால்ஷீட்டை மொத்தமாக கொடுத்துள்ளேன் என்றார்.

விஜய்யுடன் ஜோடியாக நயனதாரா நடிக்கும் முதல் படம் இது. இருப்பினும் சிவகாசி படத்தில் விஜய்யுடன் சேர்ந்து கோடம்பாக்கம் ஏரியா பாட்டுக்கு குத்துப் பாட்டு ஆடியுள்ளார் நயனதாரா. அப்போது அவர் சந்திரமுகியில் நடித்து படு பிரபலமாக இருந்த நேரம். ஆனால் இப்போது பெரும் மார்க்கெட் தளர்ச்சியுடன் காணப்படுகிறார் நயனதாரா. குருவி தனக்கு பெரும் பிரேக் தரும் என்ற நம்பிக்கை அவரிடம் உள்ளதாம்.

விஜய், நயனதாராவின் கூட்டணியில் உருவாகப் போகும் குருவி படம் இப்போதே விஜய் ரசிகர்களிடம் ஏக எதிர்பார்ப்பைத் தூண்டி விட்டுள்ளது.

இதற்கிடையே, ஆர்யாவுடன் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படும் செய்தியை நயனதாரா மறுத்துள்ளார்.

கேமராமேன் ஆர்.டி.ராஜேசகர் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கிறார். இதில் நயனதாரா நடிக்கவுள்ளதாக செய்திகள் கூறின.

இதுகுறித்து நயனதாராவிடம் கேட்டபோது, என்னைப் பற்றிய பல செய்திகளை நானே பத்திரிக்கைகள் மூலம்தான் தெரிந்து கொள்கிறேன். என்னை விட பத்திரிகைகள் என்னைப் பற்றி நிறைய தெரிந்து வைத்துள்ளதாக நினைக்கிறேன்!

ராஜேசகர் படத்தைப் பொறுத்தவரை யாரும் என்னை இதுவரை அணுகவில்லை. அந்தப் படத்தின் கதை என்ன என்று கூட எனக்குத் தெரியாது. அப்படி இருக்கையில் எப்படி அந்தப் படத்தில் நான் நடிப்பேன்? என்றார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil