»   »  நயன்தாராவின் பீர் ராசி!

நயன்தாராவின் பீர் ராசி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் ஒரு படம் ஹிட்டானால் போதும், அதே பாணியில் தொடர்ந்து வரும். குறிப்பாக ஹிட்டாகும் படங்களில் ஏதாவது ஒரு காட்சி வித்தியாசமாக இருந்தால், தொடர்ந்து அடுத்தடுத்து அந்த நடிகர் அல்லது நடிகை நடிக்கும் படங்களில் அதே போன்ற காட்சிகள் இடம்பெறும்.

அப்படி ஒரு சென்டிமென்ட்தான் நயன்தாராவும் பீரும்.


Nayanthara's Beer sentiment

சமீப காலமாக இவர் நடிக்கும் படங்களில் தவறாமல் பீர் அருந்துவது அல்லது வாங்குவது போன்ற காட்சி இடம்பெறுகின்றன. தனுசுடன் ‘யாரடி நீ மோகினி' படத்தில் மது குடிப்பது போல் நடித்தார். அந்த படம் வெற்றிபெற்றது. இதையடுத்து ஆர்யாவுடன் நடித்த ‘ராஜா ராணி' படத்தில் நயன்தாரா தன் அப்பா மற்றும் கணவருக்கு பீர் கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றது. அந்த படமும் வெற்றி.


Nayanthara's Beer sentiment

தனால் ‘நானும் ரவுடிதான்' படத்தில் ‘டாஸ்மாக்' கடைக்கு சென்று நயன்தாரா பீர்பாட்டில் வாங்கி வருவது போன்ற ஒரு காட்சியை வைத்தனர். இந்த காட்சியில் நடித்ததற்காக அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. பெண்களுக்கு குடிப்பழக்கத்தை அவர் தூண்டுகிறார் என்றும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் எதிர்ப்புகளை மீறி ‘நானும் ரவுடிதான்' படம் சமீபத்தில் வெளியாகி பெரிய லாபம் பார்த்தது.


Nayanthara's Beer sentiment

இப்போது ‘திருநாள்' என்ற படத்தில் ஜீவா ஜோடியாக நயன்தாரா நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்திலும் சென்டிமென்டாக நயன்தாரா கையில் பீர் பாட்டிலுடன் இருப்பது போன்ற காட்சியை படமாக்கி உள்ளனர்.


நயன்தாராவை டாஸ்மாக் அம்பாஸிடராக்காமல் விடமாட்டார்கள் போல!

English summary
Recent hit movies of actress Nayanthara sentimentally having a scene of drinking alcohol or Beer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil