ரசிகர் கூட்டத்தில் சிக்கி, தத்தளித்த நயன்தாரா... வைரலாகும் வீடியோ

புதுச்சேரி : டைரக்டர் விக்னேஷ் தனது நான்காவது படமாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் லீட் ரோலில் நடிக்கிறார்கள்.

Recommended Video

NAYAN -யை பார்க்க திரண்ட கூட்டம் | kathuvakkula Rendu Kadhal, Vijaysethupathi

விஜய் சேதுபதி ஏற்கனவே சமந்தா மற்றும் நயன்தாராவுடன் தனித்தனியாக இணைந்து நடித்துள்ளார். ஆனால் நயன்தாராவும், சமந்தாவும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது இதுதான் முதல் முறை. இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

அக்டோபரில் ரிலீஸ்

அக்டோபரில் ரிலீஸ்

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவுடன் இணைந்து விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தை அக்டோபரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் ஷுட்டிங் தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது.

இறுதிக்கட்ட ஷுட்டிங்

இறுதிக்கட்ட ஷுட்டிங்

இந்த படத்தின் வேலைகள் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. விரைவில் படத்தின் ஷுட்டிங் முடிவடைய உள்ளது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ஷுட்டிங்கில் கலந்து கொள்ள ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்தார் சமந்தா. அங்கிருந்து புதுச்சேரியில் நடக்கும் ஷுட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார்.

சுற்றி வளைத்த ரசிகர்கள்

சுற்றி வளைத்த ரசிகர்கள்

முக்கோண காதல் கதையான இந்த படம் ரொமான்டிக் காமெடி கதையாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷுட்டிங்கில் கலந்து கொள்ள லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் சமீபத்தில் புதுச்சேரி சென்றுள்ளார். அப்போது ஷுட்டிங் முடிந்து திரும்பிய நயன்தாராவை ரசிகர்கள் சுற்றி வளைத்துக் கொண்டுள்ளனர்.

சிக்கி தவித்த நயன்தாரா

சிக்கி தவித்த நயன்தாரா

ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறி காரில் ஏற முடியாமல் நயன்தாரா தவித்துள்ளார். படக்குழுவினர் ஒரு வழியாக ரசிகர்களிடம் இருந்து நயன்தாராவை மீட்டு, பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். அப்போது நயன்தாரா ரொம்ப சிம்பிளா ஆரஞ்சு நிற சல்வார் கமீஸ் அணிந்து இருந்தார்.

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

சுற்றி நின்று மொபைலில் வீடியோ, ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்த ரசிகர்களை பார்த்து சிரித்தபடி, கையசைத்து விட்டு காரில் ஏறிச் சென்றார் நயன்தாரா. நயன்தாரா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக்கொண்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நிச்சயதார்த்தம் முடிந்தது

நிச்சயதார்த்தம் முடிந்தது

சமீப காலமாக மீடியாக்களின் கவனத்தை ஈர்த்து, அதிகம் பேசப்படும் நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறது. அதற்கு காரணம் சமீபத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவன் பற்றி வெளிப்படையாக பேட்டி அளித்தது தான். அதோடு விக்னேஷ் சிவனுக்கும் தனக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நயன்தாரா கூறியது சோஷியல் மீடியாக்களில் தீயாய் பரவியது.

எப்போது திருமணம்

எப்போது திருமணம்

ஏற்கனவே எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறீர்கள் என கேட்டு வந்த ரசிகர்கள், நயன்தாராவின் இந்த பேட்டிக்கு பிறகு அதிகமாக கேட்க துவங்கி விட்டனர். ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளதால், விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X