»   »  பகத் பாசில் கிரீன் சிக்னல்… மீண்டும் நடிக்க வரும் நஸ்ரியா

பகத் பாசில் கிரீன் சிக்னல்… மீண்டும் நடிக்க வரும் நஸ்ரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன நஸ்ரியா மீண்டும் நடிக்க வருகிறாராம். இதனை அவரது கணவர் பகத் பாசில் உறுதிபடுத்தியுள்ளார்.

தமிழ் திரை உலகில் சில படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களை கொள்ளை கொண்ட நஸ்ரியா திருமணத்திற்குப் பின்னர் நடிப்பிற்கு முழுக்கு போட்டார். ஆனாலும் ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களில் உற்சாகமாகவே வலம் வந்தார்.

இப்போது கணவரிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவே திரைப்படங்களில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர முடிவு செய்துள்ளாராம்.

மலையாள டிவி சேனலில் தொகுப்பாளினியாக இருந்த நஸ்ரியா, 2006 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக மலையாள படத்தில் அறிமுகமானார்.

நேரம் பட நாயகி

நேரம் பட நாயகி

தமிழில் நேரம் படம் மூலம் அறிமுகமானார். ரசிகர்களுக்குப் பிடித்துப் போகவே வரிசையாக படங்கள் புக் ஆனது. சில ஹிட் சில ப்ளாப் என இருந்தாலும் இன்னும் பல ஆண்டுகள் தமிழ், மலையாள திரையுலகின் கனவுக்கன்னியாக நிலைத்து நிற்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டு இளம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றிவிட்டார் நஸ்ரியா.

கணவர் சம்மதம்

கணவர் சம்மதம்

திருமணம் நிச்சயமான பின், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்களைத்தவிர வேறு எந்த படங்களிலும் நஸ்ரியா புதிதாக நடிக்கவில்லை. ஆனால், அவரது கணவர் பாசிலோ நஸ்ரியாவின் நடிப்பிற்கு எந்தவித தடையும் விதிக்கவில்லை. மாறாக, நஸ்ரியா விரும்பினால் நடிக்கலாம் என கூறி இருந்தார்.

படிப்பில் பிஸி

படிப்பில் பிஸி

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்களது திருமணம் முடிந்தபிறகு, குடும்பம், படிப்பு என கவனம் செலுத்திய நஸ்ரியா நடிப்பு பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. ஆனால், அவ்வப்போது கணவர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு தளங்கள், நட்சத்திர விருந்து நிகழ்ச்சிகள் என திரையுலகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

மலையாள படத்தில்

மலையாள படத்தில்

இந்நிலையில், கணவர் பகத் பாசிலின் ஒத்துழைப்போடு மீண்டும் வெள்ளித்திரையில் ஜொலிக்க வருகிறார் நஸ்ரியா. அந்த வகையில் நஸ்ரியாவின் வெற்றிப் படமான ‘பெங்களூர் டேஸ்' படத்தைத் தயாரித்த இயக்குநர் அன்வர் ர‌ஷீத் இயக்கவுள்ள ‘மணியறையில் ஜின்னு' என்கிற படத்தில் நஸ்ரியா நடிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், நஸ்ரியாவுக்கு ஜோடியாக அவரது கணவர் பகத் பாசிலே நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நஸ்ரியா ரீ என்ட்ரி

நஸ்ரியா ரீ என்ட்ரி

நடிகைகளுக்கு கல்யாணம் ஆனதும் இல்லறத்தில் செட்டிலாகும் காலம் மலையேறிக்கொண்டிருக்கிறது. இயக்குனர் விஜய்யை மணந்த அமலாபால் மீண்டும் நடிக்க வந்துவிட்டார். அதேபோல் அனன்யா, காவ்யா மாதவன், நவ்யா நாயர், ஜோதிகா, ரீமா கல்லிங்கல் போன்றவர்களும் திருமணத்துக்கு பிறகு நடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் இப்போது நஸ்ரியாவும் இணைந்துள்ளார்.

கன்டிசன்ஸ் அப்ளை

கன்டிசன்ஸ் அப்ளை

திருமணத்திற்கு முன்பே அப்படி நடிக்க மாட்டேன் இப்படி நடிக்க மாட்டேன் என்று கண்டிசன் போட்டார் நஸ்ரியா. இப்போது கண்டிசன்கள் கூடுதலாக வாய்ப்பு உள்ளது. நம்ம இயக்குநர்கள் நஸ்ரியாவின் கண்டிசனுக்கு ஒத்துக்கொள்வார்களா?

English summary
Mollywood actress Nazriya Nazim is all set to come back to acting soon.
Please Wait while comments are loading...