»   »  காளையுடன் நிலா!

காளையுடன் நிலா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்புவின் காள படத்தில் நிலா நடிக்கவுள்ளாராம். படத்தில் சிம்புவுடன் சேர்ந்து குத்துப் பாட்டுக்கு ஆடவுள்ளார் நிலா.

வல்லவனுக்குப் பிறகு சிம்பு சீறப் போகும் படம் காள. படத்தில் நாயகி உள்ளிட்ட கேரக்டர்களை மிக மிக நிதானமாக செலக்ட் செய்து வருகிறார் சிம்பு.

படத்தில் புதிதாக சேர்ந்துள்ளவர் நிலா. நாயகியாக இதில் நிலா நடிக்கவில்லை. மாறாக சிம்புவுடன் குத்துப் பாட்டுக்கு ஆடவுள்ளார் நிலா.

அ ஆ படத்துக்குப் பிறகு நிலா மீதான எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் அவர் விட்ட பீலாக்கள், செய்த பந்தாக்களால் கடுப்பாகிப் போன கோலிவுட்டார், நிலா நிலா ஓடிப் போ என்று பாட்டை மாற்றிப் பாடினார்.

அப்செட் ஆகிப் போன நிலா தனது பந்தாக்களைக் குறைத்துக் கொண்டு இப்போது சமர்த்துப் பெண்ணாகி வாய்ப்புதேடி வருகிறார். இப்போது பரத்துடன் கில்லாடி படத்தில் மட்டும் நடித்து வருகிறார் நிலா. தெலுங்கிலும் இவருக்கு சுத்தமாக வாய்ப்பில்லை.

இதனால் வருகிற வாய்ப்புகளை ஒத்துக் கொண்டு திறமை காட்டுவது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் நிலா. சில நாட்களுக்கு முன்பு நிலாவை சிம்பு தொடர்பு கொண்டு காள படத்தில் ஒரு குத்துப் பாட்டு இருக்கிறது, வர முடியுமா என்று கேட்டுள்ளார்.

எந்தத் தயக்கமும் இல்லாமல் ஓ.கே. சொல்லி விட்டாராம் நிலா. இதுகுறித்து நிலா கூறுகையில், சிம்பு திறமையான நடிகர். அத்தோடு நல்ல இயக்குநரும் கூட. அவர் படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடுவதில் தவறே இல்லை.

இந்தியில் கூட மாதுரி தீக்ஷித், ராணி முகர்ஜி, ப்ரீத்தி ஜிந்தா போன்ற முன்னணி நாயகிகள் குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளனர். அந்த வரிசையில் நானும் இப்போது குத்துப் பாட்டுக்கு ஆடப் போகிறேன்.

அதற்காக தொடர்ந்து குத்துப் பாட்டுக்கு ஆடுவேன் என்று முடிவு செய்து விடாதீர்கள். படத்தின் ஹீரோ மற்றும் பாட்டின் முக்கியத்துவத்தைப் பொருத்து அதுகுறித்து முடிவெடுப்பேன் என்றார்.

குத்துப் பாட்டில் என்ன முக்கியத்துவம் இருக்கப் போகிறது, நிலா சொல்வது புரியலையே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil