»   »  'பிரேமம்' நிவின்பாலிக்கு ஜோடியாகும் வரலட்சுமி

'பிரேமம்' நிவின்பாலிக்கு ஜோடியாகும் வரலட்சுமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நிவின் பாலியின் அடுத்த தமிழ்ப்படத்தில், அவருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
'
'நேரம்', 'பிரேமம்' போன்ற படங்களின் மூலம் தமிழ்நாட்டில் எக்கச்சக்கமான ரசிகர்களைப் பெற்றவர் நிவின் பாலி.

குறிப்பாக இவரின் நடிப்பில் வெளியான 'பிரேமம்' தமிழ்நாட்டில் 250 நாட்களைத் தாண்டி சாதனை படைத்தது.

Nivin Pauly's Next Tamil Movie

தமிழில் 'நேரம்' படத்தில் நடித்திருந்த நிவின் பாலி, தொடர் ஹிட்கள் காரணமாக முன்னணி மலையாள நடிகர்களில் ஒருவராக வலம்வருகிறார்.

இந்நிலையில் மிஷ்கினின் உதவியாளர் கவுதம் இயக்கும் புதிய படத்தில், நிவின் பாலி நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிவின் பாலியின் இந்த 2 வது தமிழ்ப்படத்தில் அவருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

கடைசியாக வரலட்சுமி நடிப்பில் வெளியான 'தாரை தப்பட்டை' படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

இதனால் வரலட்சுமி-நிவின் பாலி இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்னும் செய்தி, 2 மாநில ரசிகர்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources said Varalakshmi to Pair with Nivin Pauly for his Next Tamil Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil