»   »  கவர்ச்சிக்கு ஏங்கும் திரிஷா

கவர்ச்சிக்கு ஏங்கும் திரிஷா

Subscribe to Oneindia Tamil
Trisha
செக்ஸியான ரோல்களில் நடிக்க என்னை யாருமே கூப்பிடவில்லை என்று ஏக்கத்துடன் கூறுகிறார் திரிஷா.

குடும்பப் போர்வையுடன் உலா வந்து கொண்டிருந்த பல நாயகிகளும் இப்போது கிளாமர் சால்வையுடன் கிளம்பியுள்ளனர்.

முதலில் சினேகா இந்த வரிசையை ஆரம்பித்து வைத்தார். பிறகு பிரியா மணி, நயனதாரா, ஆசின், சந்தியா என பலரும் கிளாமர் களத்தில் குதித்தனர்.

இப்போது திரிஷாவும் செக்ஸி ரோல்கள் மீதான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். திரிஷா கிளாமரான ரோல்களில் நடித்திருந்தாலும் செக்ஸியான ரோல்களில் நடித்ததில்லை. அதுபோன்ற வாய்ப்புகள் வந்தால் நடிக்கத் தயார் என திரிஷா கூறியுள்ளார்.

கிளாமர், குடும்பப் பாங்கு என சம அளவில் கலந்து கலாய்த்து வரும் திரிஷா, தெலுங்கில் இரண்டையும் மாறி மாறி வருவது போல பார்த்துக் கொள்கிறார். தமிழில் கிளாமருக்கு இரண்டாவது இடத்தைத்தான் கொடுத்துள்ளார்.

ஆனால் இப்போது இரு மொழிகளிலும் செக்சியாக நடிக்க துடிக்கிறாராம் திரிஷா.

திரிஷாவின் இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் பில்லாவின் நயனதாரா காட்டிய விஸ்வரூபம்தான். கருப்பு நிற உடையில் நயனதாரா வந்து போன அழகைப் பார்த்து ரசிகர்கள் தித்திப்புடன் உலவிக் கொண்டுள்ளதாக கேள்விப்பட்டதிலிருந்து டென்ஷனாக உள்ளாராம் திரிஷா.

என்னாலும் கூட செக்ஸியாக நடிக்க நானும் தயார்தான் என்று மார் தட்டிச் சொல்கிறார் திரிஷா.

இதுகுறித்து அவர் கூறுகையில், கிளாமர் ரோல்களில் நடிக்க நான் தயாராகத்தான் உள்ளேன். ஆனால் எனது உடல் வாகுக்கு பிகினி போட்டால் எப்படிப் பொருந்தும்? (ஒரு படத்திலாவது அப்படி வந்து போனால்தானே பொருந்துமா, இல்லையான்னு சொல்ல முடியும்?)

மேலும் என்னிடம் யாருமே நீச்சல் உடைந்து அணிந்து நடிக்குமாறோ அல்லது செக்ஸியான கேரக்டரில் நடிக்குமாறோ இதுவரை கேட்டுக் கொண்டதில்லை. எதிர்காலத்தில் பில்லாவில் நயனதாரா நடித்தது போன்ற கிளாமர் ரோல் கிடைத்தால் கண்டிப்பாக பரிசீலிப்பேன் என்றார் திரிஷா.

தமிழில் புதிதாக ஒரு படத்தில் புக் ஆகியுள்ளார் திரிஷா. இதில் அவருக்கு ஜோடி ஆர்யா. படத்தின் பெயர் சர்வம். விஷ்ணுவர்த்தன் இயக்கவுள்ளார்.

திரிஷாவின் ஏக்கத்தை விஷ்ணு தீர்த்து வைப்பாரா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil