»   »  ஓமைகாட்! வழக்கமா மத்தவங்களுப்பு 'அப்பு' விடும் சல்மானையே அறைந்த அனுஷ்கா

ஓமைகாட்! வழக்கமா மத்தவங்களுப்பு 'அப்பு' விடும் சல்மானையே அறைந்த அனுஷ்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சுல்தான் படத்தில் வரும் சண்டை காட்சியில் நடிக்கையில் அனுஷ்கா சர்மா சல்மான் கானை கன்னத்தில் அறைந்துவிட்டாராம்.

யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சல்மான் கான் நடித்து வரும் படம் சுல்தான். சுல்தானில் சல்மான் கானுடன் ஜோடியாக அந்த நடிகை நடிக்கிறார், இந்த நடிகை நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.

இறுதியில் சல்மானுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அனுஷ்கா சர்மாவுக்கு தான் கிடைத்தது.

குத்துச் சண்டை

குத்துச் சண்டை

சுல்தான் படத்தில் சல்மானும், அனுஷ்காவும் குத்துச் சண்டை வீரர், வீராங்கனையாக நடிக்கிறார்கள். இந்த படத்திற்காக சல்மான் தனது ஜிம் பாடியை கும் பாடியாக்கியுள்ளார்.

சண்டை காட்சி

சண்டை காட்சி

சண்டை காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர். காட்சியின்படி அனுஷ்கா சல்மான் கானை கன்னத்தில் அறைய வேண்டும். இந்த காட்சியை எப்படி படமாக்கப் போகிறோமோ என்று இயக்குனர் சற்று கலங்கியுள்ளார்.

பரவாயில்லை அறை

பரவாயில்லை அறை

சல்மானை எப்படி அறைவது என்று அனுஷ்கா தயங்கியுள்ளார். ஆனால் சல்மானோ, காட்சி தத்ரூபமாக வர வேண்டும் அதனால் என்னை நிஜமாகவே அறை என்று கூறி அறை வாங்கியுள்ளார்.

வாவ்

வாவ்

படத்திற்காக தன்னை நிஜமாக கன்னத்தில் அறையுமாறு கூறிய சல்மானை பார்த்து படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

English summary
According to reports, Anushka Sharma slapped Salman Khan while shooting for a fight sequence in the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil