»   »  ஓமைகாட்! பத்திரிக்கையாளர்களை பார்த்து நடுவிரலை காட்டிய நடிகை கஜோல்

ஓமைகாட்! பத்திரிக்கையாளர்களை பார்த்து நடுவிரலை காட்டிய நடிகை கஜோல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கஜோல் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது நடுவிரலை காட்டியுள்ளார்.

பாலிவுட் நடிகை கஜோல் ஷாருக்கானுடன் சேர்ந்து தில்வாலே படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நிச்சயம் ஹிட்டாகும் என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள். காரணம் பாலிவுட் கொண்டாடும் வெற்றி ஜோடியான கஜோலும், ஷாருக்கும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளது தான்.

OMG! Check out Kajol showing the finger to the press!

தில்வாலே படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா, ஐஸ்லாந்து மற்றும் இந்தியாவில் நடைபெற்றுள்ளது. மாசாலா படத்திற்கு பெயர் போன ரோஹித் ஷெட்டி தான் தில்வாலே படத்தை இயக்கியுள்ளார்.

கஜோல் கடந்த வாரம் மும்பையில் தனது குடும்பத்தாருடன் துர்கா பூஜையை கொண்டாடினார். பூஜையில் கஜோலின் உறவினரும், நடிகையுமான ஷர்பானி முகர்ஜி கலந்து கொண்டார்.

அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த கஜோல் ஜாலி மூடில் பேசிக் கொண்டிருந்தார். திடீர் என்று அவர் பத்திரிக்கையாளர்களை நோக்கி தனது நடுவிரலை காண்பித்தார். அவர் நடுவிரலை காண்பித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

English summary
Bollywood actress Kajol showed her middle finger to journalists during Durga Pooja celebration in Mumbai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil