»   »  இது என்ன இந்த ஹன்சிகா, நயன்-த்ரிஷா பற்றி இப்படி சொல்லிட்டாங்க!

இது என்ன இந்த ஹன்சிகா, நயன்-த்ரிஷா பற்றி இப்படி சொல்லிட்டாங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹன்சிகா த்ரிஷா, நயன்தாரா பற்றி கூறியது பலரையும் வியக்க வைத்துள்ளது.

ஒரு ஹீரோயினுக்கு எத்தனை வயதானாலும் அவர் மனதில் அவர் இளமையாகவே நினைப்பார். அதில் தவறு எதுவும் இல்லை. உங்களுக்கு வயதாகிவிட்டது என்று எந்த ஹீரோயினிடமாவது கூறினால் உங்களுக்கு ஏழரை ஆரம்பிக்கிறது என்று அர்த்தம்.

இந்நிலையில் தான் பேட்டி ஒன்றில் வயது பிரச்சனையை இழுத்துள்ளார் ஹன்சிகா.

ஹன்சிகா

ஹன்சிகா

கோலிவுட்டில் கொடி கெட்டிப் பறந்த ஹன்சிகாவின் நிலைமை தற்போது மிகவும் பரிதாபமாக உள்ளது. அவர் வாய்ப்பு கேட்டு தூதுவிட்டால் அவருடன் நடித்த ஹீரோக்கள் கூட கண்டு கொள்வது இல்லை.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

ஹன்சிகா கையில் தமிழ் படங்கள் எதுவும் இல்லை. அவரும், ஜெயம் ரவியும் சேர்ந்து நடித்த போகன் படம் வரும் 2ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை அவர் பெரிதும் எதிர்பார்க்கிறார்.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா, த்ரிஷா ஆகியோர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடிக்கிறார்கள். நீங்கள் ஏன் அப்படிப்பட்ட படங்களில் நடிப்பது இல்லை என்று ஹன்சிகாவிடம் கேட்கப்பட்டது.

வயது

வயது

எனக்கு 25 வயசு தான் ஆகிறது. அவர்களை போன்று வயதான பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பேன் என்றார் ஹன்சிகா. ஹன்சிகாவின் இந்த கருத்து பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
Hansika has reportedly taken a dig at seniors Trisha and Nayanthara by talking about their age.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil