»   »  வாயை வச்சிக்கிட்டு சும்மாவே இருக்கிறது இல்லை.. இந்த கங்கனா!

வாயை வச்சிக்கிட்டு சும்மாவே இருக்கிறது இல்லை.. இந்த கங்கனா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் ஹீரோக்களை சகட்டு மேனிக்கு விமர்சித்து வரும் கங்கனா ரனாவத்துக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

பாலிவுட்டில் நடிக்க வந்த வேகத்தில் பிரபலம் ஆனவர் அல்ல கங்கனா ரனாவத். போராடித் தான் தனக்கு என ஒரு பெயரை எடுத்தார். கங்கனாவா, நடிப்பில் பிச்சு உதறிவிடுவார் என்று பெயர் எடுத்துள்ளார்.

அதே சமயம் அவரால் வாயை மூடிக் கொண்டு சும்மா இருக்கவே முடியாது.

விமர்சனம்

விமர்சனம்

பாலிவுட்டில் உள்ள முக்கியமான மூன்று கான்களான ஷாருக், சல்மான், ஆமீர் கானை பகைத்துக் கொண்டார். நான் கான்கள் உதவியில்லாமல் முன்னுக்கு வந்தவள். எனக்கு அவர்களின் ஆதரவு தேவையில்லை என்று கங்கனா தெரிவித்திருந்தார்.

ரித்திக் ரோஷன்

ரித்திக் ரோஷன்

சிறிது காலம் ரித்திக் ரோஷனை காதலித்தார். ஆனால் அவரோ கங்கனாவுடனான உறவை தொடர விரும்பவில்லை. இந்நிலையில் கங்கனா தொடர்ந்து ரித்திக்கை குத்திக் காட்டியே பேட்டி அளித்து அவரின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.

கங்கனா

கங்கனா

இனி எப்பொழுதும் என் படங்களில் கங்கனாவை ஹீரோயினாக நடிக்க வைக்கவே கூடாது என்று ரித்திக் ரோஷன் இயக்குனர்களிடம் தெரிவித்துள்ளார். ரித்திக் நண்பர்களாக இருக்கும் ஹீரோக்களும் இயக்குனர்களிடம் கங்கனா வேண்டாம் என்று கூறி வருகிறார்கள்.

வெறுப்பு

வெறுப்பு

படப்பிடிப்பு தளத்தில் ஓவராக சீன் போடுவதால் கங்கனாவை சில இயக்குனர்களுக்கு பிடிக்காமல் உள்ளது. அதனால் அவர்கள் அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க விரும்பவில்லை.

சினிமா

சினிமா

நடிப்பில் சக்கை போடு போட்டாலும் பாலிவுட்டில் பெரும்பாலானோரின் பகையை சம்பாத்தித்து வைத்துள்ளார் கங்கனா. பத்தாக்குறைக்கு சீனியர் நடிகர்களான அஜய் தேவ்கன், சஞ்சய் தத்தையும் விமர்சித்து அவர்களின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார். இப்படி திரும்பும் பக்கம் எல்லாம் பகையாக இருப்பதால் கங்கனாவின் பாலிவுட் பயணம் இனி கரடு முரடாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

English summary
Bollywood actress Kangana Ranaut's career is in danger after she rubbed some heroes on the wrong side.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil