twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னைக்கும், எனக்கும் இடையே “இட்லி, சாம்பார்” தொடர்பு – ஹன்சிகா மகிழ்ச்சி!

    |

    சென்னை: சென்னையின் 375 ஆவது பிறந்தநாளான இன்று தனக்கும், சென்னைக்கும் இடையிலான நெருக்கத்தினைப் பற்றி மனம் திறந்துள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

    தான் சிறு வயதிலேயே இட்லிக்கு அடிமை என்று ஹன்சிகா தனது நினைவு கூறலில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "முதல்முறை நான் சென்னைக்கு வருவதற்கு முன்பாகவே என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரிகளில் இட்லிக்கு அடிமையாக இருந்துள்ளேன்.

    இட்லி, சாம்பார்க்கும், எனக்குமான தொடர்பு அச்சிறுவயதிலேயே ஏற்பட்டு விட்டது.

    இட்லி, சாம்பார்க்கு நான் அடிமை:

    இட்லி, சாம்பார்க்கு நான் அடிமை:

    அதன்பின்னர் முதன்முதலாக சென்னையில் என்னுடைய படபிடிப்பினைத் தொடங்கிய போதுதான் நான் உணர்ந்தேன் சென்னையில் இன்னும் பல்வேறு நாவில் நீர் ஊறும் உணவு வகைகளும் உண்டு என்று.

    தங்கமான மனது:

    தங்கமான மனது:

    சும்மா சொல்லக்கூடாது இங்கு அனைவருமே தங்கமான மனது படைத்தவர்கள்.

    மென்மையான மனிதர்கள்:

    மென்மையான மனிதர்கள்:

    எவ்வளவு மென்மையான மனிதர்கள் இங்கு இருக்கின்றார்கள். அவர்கள் உங்களை அவர்களில் ஒருவராகவே நினைக்கத் துவங்கி விடுவார்கள்.

    உழைப்பாளிகளின் நகரம்:

    உழைப்பாளிகளின் நகரம்:

    சென்னையை பற்றி என்னிடம் கேட்டால், சுறுசுறுப்பான, அன்பான, ஈகை உடைய, மென்மையான, உழைப்பாளிகளைக் கொண்ட ஒரு நகரம் என்றே சொல்வேன்.

    எனக்கு ரொம்ப பசிக்குது:

    எனக்கு ரொம்ப பசிக்குது:

    இங்கு என்னுடைய மிகவும் பிடித்த வாக்கியமே தமிழில், "எனக்கு ரொம்ப பசிக்குது" என்பதுதான். அந்த அளவுக்கு நாவில் நீர் ஊற வைக்கின்றன உணவுகள்.

    சென்னையும் என் வீடுதான்:

    சென்னையும் என் வீடுதான்:

    மும்பையில் என்னுடைய வீடு இருந்தாலும் சென்னையும் என்னுடைய வீடுதான். மெட்ராஸ் டேயான இன்று நான் சொல்ல விரும்புவது நாம் அனைவரும் சென்னையின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும்.

    பாரம்பரிய நகரம்:

    பாரம்பரிய நகரம்:

    பாரம்பரியத்தாலும், பண்பாட்டினாலும் கட்டுண்ட வேறு ஒரு நகரம் சென்னை போல எதுவும் இல்லை என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

    English summary
    Even before my first visit to Chennai, I was always called 'idli wali' in school and college. My love for idli sambar began when I was a child.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X