For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஒன் வே படத்தில் நான் தான் கோவை சரளா மகள் ... 'பைசா' ஆரா மகிழ்ச்சி

  |

  சென்னை "ஒன் வே" திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நடிகை ஆரா கூறியுள்ளார்.

  நடிகைகள் ஒன்று மாடர்னாக இருப்பார்கள், இல்லை என்றால், குடும்ப பாணி கலாச்சார பாவனையோடு இருப்பார்கள். இரண்டு கலந்து ஒரு சில நடிகைகளே இருப்பார்கள். அப்படியானவர்களுக்கு ரசிகர்களிடம் ஒரு தனி ஈர்ப்பு இருக்கும். சினிமாவிலும் அவர்கள் மிகப்பெரிய இடத்தை அடைவார்கள். அந்த வகையில் இரண்டு வித தோற்றங்களிலும் கலக்கும் நடிகையாக ஆரா இருக்கிறார்.

  நளினமும், நடிப்பும் அவருக்கு இயல்பாகவே வருகிறது. முதல் படமான "பைசா" படத்திலேயே பேரழகு தோற்றத்திலும், அசரடிக்கும் பாவனைகளாலும், நல்ல நடிகை என பெயர் பெற்று விட்டார். வந்த வேகத்தில் நிறைய படங்களில் நடிக்காமல், படங்களை மிக கவனமுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் "ஒன் வே" மற்றும் "குழலி" என இரண்டு தரமான படங்கள் தயாராகி வருகிறது.

   One Way is a good story

  "ஒன் வே"படம் குறித்து நடிகை ஆரா பகிர்ந்துகொண்டதாவது.. நடிகையாக எனது பயணத்தை தொடங்கிய போதே நல்ல தரமான, அழுத்தமான கதையுள்ள, படங்களில் கனமான கதாப்பாத்திரங்களில் தான் நடிக்க வேண்டுமென தீர்மானித்தேன். மேலும், நேர்த்திமிகுந்த, சவாலான கதாப்பாத்திரங்களுக்கு நான் எப்போதும் தயார். நான் நினைத்த மாதிரியான "ஓன் வே" நல்ல தரமான கதை இப்படம் நிச்சயம் வெற்றி பெறும், படத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

   One Way is a good story

  நான் இப்படத்தில் கோவை சரளா மேடமுடைய மகளாக நடிக்கிறேன். கோவை சரளா மேடமுடன் இப்படத்தில் நடித்தது மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவம். பல படங்களில், நம் மனங்களை கொள்ளை கொண்ட நடிப்பை தந்தவர் கோவை சரளா மேடம். இவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தும், அவர் என்னிடம் வெகு இயல்பாக, எளிமையாக பழகினார். அவருடன் நடித்த தருணங்கள் எப்போதும் வாழ்வின் இனிமையான மறக்க முடியாத தருணங்களாக இருக்கும்.

   One Way is a good story

  "ஒன் வே" திரைப்படம் இப்படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் மிக முக்கியமான படமாக இருக்கும்.. ராஜாத்தி பாண்டியன் அவர்கள் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் எம்.எஸ். சக்திவேல் இயக்குகிறார். தன் முதல் படைப்பான "மைதானம்" மூலமாக விமர்சகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

   One Way is a good story

  இப்படத்தில் நடிகர் பிரபஞ்சன் முன்னணி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். ஆரா அவருக்கு சகோதரியாக நடிக்கிறார். "கோலமாவு கோகிலா" பட வில்லன் வினோத் இதில் எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்கிறார். கோவை சரளா மிக முக்கியமான வேடமேற்றுள்ளார். மேலும் ஜோக்கர் பாவா செல்லதுரை, கன்னத்தில் முத்தமிட்டால் ஹஷி குமார், கடாரம் கொண்டான் ரவீந்த்ரா, திவ்யங்கனா ஜெயின், அப்துல்லா, தோனி, சுர்ஜித், துப்பறிவாளன் பில்லி மற்றும் கிரிஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

   One Way is a good story

  இவர்களுடன் தேசிய விருது பெற்ற பெங்காலி சினிமாவில் புகழ்பெற்ற பருன் சந்தா, கௌதம் ஹால்டர் மிக முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்கள். படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் வெளியீடு ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்புடன் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

  Read more about: actress நடிகை
  English summary
  Actress Aara has said that "One Way" is a good story.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X