»   »  தபாங் 3: லேடி ரஜினியை ஓரங்கட்டிவிட்டு சல்மானுடன் டூயட் பாடும் பரினீத்தி?

தபாங் 3: லேடி ரஜினியை ஓரங்கட்டிவிட்டு சல்மானுடன் டூயட் பாடும் பரினீத்தி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தபாங் படத்தின் மூன்றாம் பாகத்தில் சோனாக்ஷிக்கு பதில் பரினீத்தி சோப்ராவை சல்மான் கானுக்கு ஜோடியாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கான் தயாரித்த படம் தபாங். சல்மான் சுல்புல் பாண்டே என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தபாங் படம் மூலம் ஹீரோயின் ஆனவர் தான் சோனாக்ஷி சின்ஹா.

Parineeti Chopra replaces Sonakshi in Dabangg 3?

அதன் பிறகு அர்பாஸ் கான் சல்மான், சோனாக்ஷியை வைத்து தபாங் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, தயாரித்தார். எதிர்பார்த்தது போன்றே அந்த படமும் ஹிட். இதையடுத்து தபாங் படத்தின் மூன்றாம் பாகத்தையும் எடுக்க உள்ளார் அர்பாஸ்.

ஹீரோ அப்கோர்ஸ் சல்மான் கானே. ஆனால் ஹீரோயினாக சோனாக்ஷிக்கு பதில் ப்ரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி சோப்ராவை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறாராம் அர்பாஸ்.

இது குறித்து பரினீத்தியிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில்,

அப்படியா, எனக்கே இப்பொழுது தான் தெரியும். தபாங் 3 படத்தில் நடிக்க ஆவலாக உள்ளேன் என்றார்.

என்ன சோனா, தபாங் 3 படத்தில் நீங்கள் இல்லையாமே என்று கேட்டதற்கு அவர் அதை காதிலேயே வாங்கவில்லை.

English summary
Buzz is that Parineeti Chopra will replace Sonakshi Sinha in Salman Khan starrer Dabangg 3.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil