»   »  அடி அண்ட புளுகுனி, ஆகாச புளுகுனி: நடிகையை வறுத்தெடுத்த பள்ளித் தோழிகள்

அடி அண்ட புளுகுனி, ஆகாச புளுகுனி: நடிகையை வறுத்தெடுத்த பள்ளித் தோழிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா பொய் சொல்வதாக அவரது பள்ளித் தோழிகள் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ரா தனது பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பள்ளிக்கு பேருந்து, டாக்சியில் செல்ல பணம் இல்லாமல் சைக்கிளில் சென்றதாக கூறினார்.


பள்ளி காலத்தில் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டதாக உருக்கமாக பேசினார்.


தோழி

தோழி

பரினீத்தி தனது பணக் கஷ்டம் பற்றி பேசியது குறித்த வீடியோவை பார்த்த அவரது பள்ளி கால தோழி கானு குப்தா ஃபேஸ்புக்கில் அவரை விளாசியுள்ளார். பணக்கார வீட்டில் இருந்து வந்துவிட்டு கேமராவுக்கு முன்னால் பொய் சொன்ன பரினீத்தி என்று ஃபேஸ்புக்கில் திட்டியுள்ளார்.


கார்

கார்

அதே பள்ளியில் படித்த எனக்கு அவரின் தந்தை கார் வைத்திருந்ததாக நினைவு. அந்த நாட்களில் சைக்கிளில் பள்ளி செல்வது டிரெண்ட். அதுவும் வசதி படைத்தவர்களால் தான் முடியும் என கானு குப்தா விளாசியுள்ளார்.


திமிர்

திமிர்

பள்ளியின் தலைவியாக இருந்ததால் பரினீத்தி சோப்ரா எவ்வளவு மோசமாக நடந்து கொண்டார் என்பது எனக்கு இன்னும் நினைவு உள்ளது. அவர் ஓவராக பொய் பேசுகிறார் என்று பரினீத்தியுடன் பள்ளியில் படித்த ஆயுஷி பன்சால் தெரிவித்துள்ளார்.


சோப்ரா ஆட்டோமொபைல்ஸ்

சோப்ரா ஆட்டோமொபைல்ஸ்

பரினீத்தி சோப்ரா சோப்ரா ஆட்டோமொபைல்ஸ் உரிமையாளின் மகள். அதனால் நிச்சயமாக கஷ்டப்பட்ட குடும்பம் கிடையாது என்று மற்றொரு பள்ளித் தோழி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.


பங்களா

பங்களா

பரினீத்தி சோப்ரா பெரிய பங்களாவில் தங்கியிருந்தார், இரண்டு கார்கள் வைத்திருந்தனர் என மற்றொரு தோழி தெரிவித்துள்ளார். பொய்க்கோழி என்று ஆளாளுக்கு பரினீத்தியை விளாசுகிறார்கள்.


English summary
Bollywood actress Parineeti Chopra is slammed by her schoolmates for telling lies about being poor while studying.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil