»   »  நடிகர்கள் இயந்திரமல்ல என்பதை ரசிகர்கள் உணர வேண்டும் - சமந்தா

நடிகர்கள் இயந்திரமல்ல என்பதை ரசிகர்கள் உணர வேண்டும் - சமந்தா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நடிக, நடிகையர் இயந்திரமல்ல என்பதை ரசிகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நடிகை சமந்தா தெரிவித்திருக்கிறார்.

தெலுங்கின் இளம் நடிகர்களில் ஒருவரான நிதினுடன் இணைந்து சமந்தா நடித்திருக்கும் படம் அ.ஆ. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகளில் சமந்தா பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில் நடிக,நடிகையர் இயந்திரமல்ல என்பதை ரசிகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என 'ஒன் இந்தியாவுக்கு' அளித்த எக்ஸ்க்ளுசிவ் பேட்டியில் நடிகை சமந்தா ஆதங்கப்பட்டிருக்கிறார்.

கூடவே வரும் ஸ்மைலி

கூடவே வரும் ஸ்மைலி

அ.ஆ படம் முழுவதும் ஒரு ஸ்மைலி பால் (Smiley Ball) உங்களுடன் பயணிக்கிறதே?

ஆமாம். இந்தப் படத்தில் ஸ்மைலி பால் என்னுடன் சேர்ந்தே பயணிக்கும். ஸ்மைலி பாலுக்கும், இப்படத்தின் கதைக்கும் ஒரு இணைப்பு உள்ளது. டிரெய்லரில் நீங்கள் இதனைக் கவனித்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

அ.ஆ

அ.ஆ

திரி விக்ரமின் அ.ஆ பட அனுபவம் எப்படி இருந்தது?

என்னுடைய திரை வாழ்க்கையில் அ.ஆ படத்திற்கு ஒரு முக்கியமான இடமுண்டு. இப்படத்தில் பணியாற்றியதையும், படப்பிடிப்பில் நடைபெற்ற நிகழ்வுகளையும் என்னால் என்றுமே மறக்க முடியாது.

நடிகர்கள்

நடிகர்கள்

திருமணத்தை நானே கூறுகிறேன் என்று ட்விட்டரில் கூறியது ஏன்?

சமூக வலைதளங்களில் தற்போது எதிர்மறையான சம்பவங்கள் அதிகரித்து விட்டன. நடிக, நடிகையர் ஒன்றும் இயந்திரங்கள் அல்ல என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

திருமணம்

உங்களது திருமணம் எப்போது?

என்னுடைய திருமணம் எப்போது என்பதை நானே கூறுவேன். அதுவரையில் வேறு யாரும் என்னுடைய திருமணம் குறித்துப் பேசுவதை நான் விரும்பவில்லை.

அ.ஆ திரைப்படம் வருகின்ற ஜூன் 3 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதில் நிதின்-சமந்தாவுடன் இணைந்து நதியா, அனன்யா, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

    English summary
    Actress Samantha says in Recent Interview ''People Should know actors are not any Machines''.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil