»   »  ஓவர் இம்சை: அபார்ட்மென்ட்டுக்குள் நுழைய நடிகை பூஜா மிஸ்ராவுக்கு தடை

ஓவர் இம்சை: அபார்ட்மென்ட்டுக்குள் நுழைய நடிகை பூஜா மிஸ்ராவுக்கு தடை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகையும், மாடலுமான பூஜா மிஸ்ராவின் தொல்லை தாங்க முடியாமல் அவர் வசிக்கும் அபார்ட்மென்டுக்குள் நுழைய நிர்வாகம் தடை விதித்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆன நடிகையும், மாடலுமான பூஜா மிஸ்ராவுக்கு புது பிரச்சனை கிளம்பியுள்ளது. அவர் மும்பை லோகந்த்வாலா பகுதியில் இருக்கும் வின்ட்சர் டவர் அபார்ட்மென்ட்டில் பெற்றோர், சகோதர், சகோதரியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் அபார்ட்மென்ட்டுக்குள் நுழைய நிர்வாகத்தினர் தடை விதித்துள்ளனர்.

சண்டை

சண்டை

பூஜாவால் ஒரே தொல்லையாக உள்ளது. காரணமே இல்லாமல் அனைவருடனும் சண்டைக்கு பாய்கிறார். அவரின் சினிமா வாழ்க்கையை கெடுக்க அபார்ட்மென்ட்டில் உள்ளவர்கள் அவருக்கு சூனியம் வைத்துவிட்டதாக கூறுகிறார் என்றார் அபார்ட்மென்ட் நிர்வாக உறுப்பினர் ஒருவர்.

கல்

கல்

ஒரு நாள் அவர் காரில் வெளியே கிளம்பினார். அவரது கார் டயரில் கல் தடுக்கியது. அவ்வளவு தான், தன் மீது பொறாமைப்பட்டு யாரோ கல்லை எறிந்ததாகக் கூறி பிரச்சனை செய்தார் என்று நிர்வாக உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

பூஜா

பூஜா

பூஜா தற்போது ஹாங்காங்கில் படப்பிடிப்பில் உள்ளார். அவர் கூறுகையில், நான் ஒன்னும் பிரச்சனை செய்யவில்லை. நான் அந்த அபார்ட்மென்ட்டுக்குள் நுழைய மாட்டேன் என்று என் குடும்பத்தாரிடம் எழுதி வாங்கியுள்ளனர். இதை நான் சும்மா விட மாட்டேன். அவர்கள் தான் என்னை கொடுமைப்படுத்துகிறார்கள் என்றார்.

சோனாக்ஷி

சோனாக்ஷி

தனது சினிமா வாழ்க்கை மீது பொறாமைப்பட்டு சோனாக்ஷி சின்ஹா தனக்கு சூனியம் வைத்ததாக கூறி வருபவர் பூஜா மிஸ்ரா. டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவர் உடைத்த பொருட்களுக்கு பணத்தை கேட்டதற்கு ஊழியரை தாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress cum model Pooja Mishra has been banned to enter her own house in Mumbai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil