»   »  என் பெயரை கெடுத்துவிட்டார்: சன்னி லியோனிடம் ரூ.100 கோடி கேட்டு கேஸ் போட்ட மாடல் பூஜா மிஸ்ரா

என் பெயரை கெடுத்துவிட்டார்: சன்னி லியோனிடம் ரூ.100 கோடி கேட்டு கேஸ் போட்ட மாடல் பூஜா மிஸ்ரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மாடல் பூஜா மிஸ்ரா ரூ. 100 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை சன்னி லியோன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் பூஜா மிஸ்ரா. டெல்லியில் நட்சத்திர ஹோட்டல் ஊழியரை தாக்கி சர்ச்சையில் சிக்கினார். பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனக்கு சூனியம் செய்துவிட்டதாக தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்.

Pooja Mishra is Suing Sunny Leone For 100 Crores in Defamation Lawsuit

இந்நிலையில் அவர் நடிகை சன்னி லியோன் மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,

நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமான போட்டியாளர். நான் அந்த போட்டியில் கலந்து கொண்ட பிறகே சன்னி லியோன் கலந்து கொண்டார். சன்னி என் மீது பொறாமைப்பட்டு எனக்கு கெட்ட பெயர் ஏற்படும் வகையில் மீடியாக்களுக்கு பேட்டி அளித்தார்.

சன்னியால் பொது மக்கள் மத்தியில் என் பெயர் டேமேஜ் ஆகிவிட்டது. இதனால் நான் என் சேமிப்பை செலவு செய்ய வேண்டியதாகிவிட்டது. எனக்கு ரூ.70 லட்சம் வரை நஷ்டம். என் பெயரை கெடுத்ததற்காக சன்னி எனக்கு ரூ.100 கோடி நஷ்டஈடு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அந்த மனு நீதிபதி நரேஷ் பாட்டில் முன்பு விசாரணைக்கு வந்தது. அவர் வழக்கு விசாரணையை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.

English summary
Model Pooja Mishra has filed a defamation case against actress Sunny Leone demanding Rs. 100 crore compensation for defaming her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil