டீனேஜில் சும்மா சிக்குனு இருக்கும் நமீதா... வர்ணிக்க வார்த்தை தேடும் ரசிகாஸ்!

சென்னை : ஹாய் மச்சான்ஸ் என்று அழகு கொஞ்சம் மொழியில் இளசுகளின் மனதை கொள்ளையடித்தவர் நமீதா.

பேஸ் புக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது முதல் போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மானாவாரியாக குவிந்து வருகின்றன.

எங்கள் அண்ணா

எங்கள் அண்ணா

நடிகை நமீதா விஜய்காந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை அடுத்து, மகா நடிகன், இங்கிலீஸ்காரன், அஜித்துடன் பில்லா, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

திருமணம்

திருமணம்

கவர்ச்சிப்புயலாக பலத்திரைப்படத்தில் நடித்த நமீதா, 2017ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்திரியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். பட வாய்ப்புகள் இல்லாததால் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பிஜேபிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். நமீதா தியேட்டர்ஸ் என்ற பெயரில் ஒடிடி தளத்தை தொடங்கி உள்ளார். இந்த ஒடிடி தளத்தில் நமீதாவின் நண்பர் ரவி வர்மா பாட்னராகவும், நமீதா நிர்வாக இயக்குனராகவும் உள்ளனர்.

டீன்னேஜ் மயிலு

டீன்னேஜ் மயிலு

இணையத்தில் செம ஆக்டிவாக இருக்கும் நமீதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டீன் ஏஜ் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், இது என் முதல் போட்டோஷூட் என்று கூறியுள்ளார் அதில் நமிதா ஆளே அடையாளம் தெரியாதது போல் ஒல்லியாக இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்... நமீதா நீங்க ஒல்லியாக இருக்கும்போதுதான் அழகாக இருக்கீங்க என்றும், டீன்னேஜ் மயிலு என்றும் வர்ணித்து வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

திடீரென சீரியல்

திடீரென சீரியல்

நடிகை நமீதா சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்திருந்தார். அந்த தொடரில். அரசியல் பிரபலமான திண்டுக்கல் லியோனி லட்சுமியின் மாமனார் திருவேங்கடமாகவும், லட்சுமியின் காதலன் மற்றும் சமையல் கலை நிபுணராக அபிஷேக் சங்கர் , லட்சுமியின் மருமகள் பவித்ராவாக வி.ஜே பார்வதி லட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்தொடர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X