»   »  இந்தியில் தயாராகும் ‘உன் சமையல் அறையில்’... சினேகா வேடத்தில் முதிர்கன்னியாக ஸ்ரேயா

இந்தியில் தயாராகும் ‘உன் சமையல் அறையில்’... சினேகா வேடத்தில் முதிர்கன்னியாக ஸ்ரேயா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தமிழில் சினேகா, பிரகாஷ்ராஜ் இணைந்து நடித்த உன் சமையல் அறையில் படம் இந்தியில் தயாராகிறது. இப்படத்தில் ஸ்ரேயா நாயகியாக நடிக்கிறார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரிப்பாளராக மட்டுமின்றி, டோனி, உன் சமையல் அறையில் உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார். இதில், உன் சமையல் அறையில் படம் மலையாளத்தில் வெளியான சால்ட் அண்ட் பெப்பர் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.


இப்படத்தை தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் இயக்கிய பிரகாஷ்ராஜ், தற்போது இந்தியிலும் தயாரித்து, இயக்க திட்டமிட்டுள்ளார்.


சினேகா...

சினேகா...

தமிழில் இப்படத்தில் சினேகா முதிர்கன்னியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார்.


தட்கா...

தட்கா...

இந்நிலையில், இந்தியில் தட்கா எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நானா படேகர் பிரகாஷ்ராஜ் வேடத்தில் நடிக்க, சினேகா வேடத்தில் ஸ்ரேயா நடிக்கிறார்/


ஸ்ரேயா...

ஸ்ரேயா...

தமிழில் புதிய படவாய்ப்புகள் இல்லாத நிலையில், த்ரிஷியம் படத்தின் இந்தி ரீமேக்கில் நாயகியாக, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். தட்கா அவருக்கு இந்தியில் இரண்டாவது படம்.


டாப்ஸி...

டாப்ஸி...

தட்கா படம் மூலம் இந்தியில் தனக்கு மேலும் பல புதிய படவாய்ப்புகள் அமையும் என ஸ்ரேயா எதிர்பார்க்கிறாராம். இப்படத்தில் ஸ்ரேயா மட்டுமின்றி மற்றொரு நாயகியாக டாப்ஸியும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Actor Prakash Raj is going to remake his directorial venture Un Samayal Arayil in Hindi. It is tentatively titled as Tadka. Shriya Saran is going to reprise the role of Sneha in the Hindi version.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil