Don't Miss!
- Lifestyle
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- News
ஒரே வார்த்தை.. ‛வீக்’கான ஓபிஎஸ்.. உச்சத்தில் ஈபிஎஸ்..உச்சநீதிமன்ற உத்தரவால் அதிரடி திருப்பம்.. ஏன்?
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Sports
விராட் கோலி இனி தேவையில்லை.. இவருக்கு இனி வாய்ப்பு கொடுங்க.. தினேஷ் கார்த்திக் கருத்து
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
முதல் பார்வையிலேயே கவனம் ஈர்த்த கன்னடத்து ப்ரணிதா

இயக்குநரின் முதல் பார்வையிலேயே அவரை கவர்ந்து விட்டாராம் இந்த ப்ரணிதா.
வம்சம் படத்தின் மூலம் ஹீரோவானார் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த அருள் நிதி. கருணாநிதியின் மகன் தமிழரசுவின் மகன் இவர். இப்போது உதயன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடி போட்டிருப்பவர்தான் ப்ரணிதா.
இந்தப் படத்துக்காக நாயகியைத் தேடி அலைந்த இயக்குநரின் கண்ணில் பட்டார் ப்ரணிதா. முதல் பார்வையிலேயே ப்ரணிதா, இயக்குநரைக் கவர்ந்து விட்டாராம்.
கன்னடத்துப் பைங்கிளியான ப்ரணிதா, கன்னடத்தில் வெளியான போக்கிரி படத்தில் நடித்திருக்கிறார். பாவா என்ற படத்திலும் நடித்தவர்.
உதயன் பட வாய்ப்பை உடனே ஏற்றுக் கொண்ட ப்ரணிதா படப்பிடிப்புக்காக சென்னைக்கு வந்தபோது இயக்குநரைப் போலவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விட்டாராம்.
யாரப்பா இது என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடிப்பில் அசத்திய ப்ரணிதாவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்பு உள்ளது. ரசிகர்களை இவர் வெகு சீக்கிரம் கவர்ந்து விடுவார் என்கிறார்கள் படக் குழுவினர்.
இந்தப் படத்தில் இன்னொரு விசேஷமும் உள்ளது. ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் ஒரு பாடலுக்கு பாடியுள்ளார். கத்ரிகோபால் நாத்தின் மகன் மணிகான் கதிரிதான் படத்தின் இசையமைப்பாளர். அவருடைய சாய்ஸாம் ஸ்ருதி.