»   »  டைரக்டர்ஸ், ஸ்கிரிப்ட் இருக்கா, ‘அழகிய பேயா’ நடிக்க நா ரெடி...: பிரியா ஆனந்தின் ‘விபரீத’ ஆசை

டைரக்டர்ஸ், ஸ்கிரிப்ட் இருக்கா, ‘அழகிய பேயா’ நடிக்க நா ரெடி...: பிரியா ஆனந்தின் ‘விபரீத’ ஆசை

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவில் எதிர்நீச்சல் போட்டு ஜெயித்தவர் ப்ரியா ஆனந்த். அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது ப்ரியா ஆனந்துக்கு.

வாமணன் படம் மூலம் ஜெய்-ன் ஜோடியாக அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். அடுத்து சித்தார்த்துடன் 180, புகைப்படம் என படங்கள் நடித்தும் ஒன்று கூட ப்ரியா ஆனந்தை பிரபலப் படுத்தவில்லை.

சமீபத்தில் சிவகார்த்திக்கேயன் ஜோடியாக எதிர்நீச்சலில் நடித்தார். படம் ஹிட்டடிக்க, கூடவே ப்ரியா ஆனந்த காட்டிலும் சாரல் வீசத் தொடங்கியது. தற்போது விக்ரம்பிரவுடன் அரிமா நம்பி, வை ராஜா வை மற்றும் சிவாவுடன் வணக்கம் சென்னையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அழகான ப்ரியா ஆனந்திற்கு பேயாக நடிக்க ஆசையாம். இது குறித்து அவர் கூறியதாவது...

எதிர்நீச்சல் வெற்றிக்குப் பின்...

எதிர்நீச்சல் வெற்றிக்குப் பின்...

எனக்கு அடுத்தடுத்து நான்கு படங்கள் புக்காகியிருக்கிறது. இதற்கு முன் வாமணன், 180 மற்றும் புகைப்படம் என மூன்று படங்கள் நடித்த போதும் எனக்கான அடையாளத்தைக் கொடுத்தது எதிர்நீச்சல் தான்.

சரியான காமெடி பீஸ்...

சரியான காமெடி பீஸ்...

சிவகார்த்திகேயனுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது. சிவகார்த்தியேயன் மிகவும் ஜாலியான மனிதர். அவர் செட்டில் இருந்தாலே கலகலப்பாக இருக்கும்.

சிரிப்பை அடக்க முடியாது....

சிரிப்பை அடக்க முடியாது....

அவருடன் நடிக்கும் போது, சில சமயங்களில் என்னால் சிரிப்பை அடக்க முடியாது. கேமராவிற்கு முன்னால் வருவதற்கு முன் அமைதியாக ஏதாவது காமெடி செய்து விடுவார். அது ரெடி ஆக்‌ஷன் சொன்னப்பிறகும் என்னுள் இருக்கும்.

பேயா நடிக்கணும் குமாரு...

பேயா நடிக்கணும் குமாரு...

சின்ன வயசுல இருந்தே எனக்கு பேய்னா பயம். அதனால், ஒரு படத்திலாவது பேய் வேஷம் கட்டிவிட நான் ஆசைப்படுகிறேன். ப்ளீஸ் டைரக்டர்ஸ் எனக்காக ஒரு பேய் ஸ்கிரிப் ரெடி பண்ணுங்களேன்...

நடித்ததில் பிடித்தது...

நடித்ததில் பிடித்தது...

பொதுவாக கதை மற்றும் கதாபாத்திரம் பிடித்தால் தான் நடிக்க ஒத்துக் கொள்கிறேன். ஆனால், இதுவரை நடித்த கதாபாத்திரத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தது வணக்கம் சென்னை தான். பிரியா என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

கேமராவிற்குப் பின்னால்...

கேமராவிற்குப் பின்னால்...

நா ரொம்ப ஜாலி டைப். அதனால தேவையில்லாம எதுக்கும் கவலைப்பட மாட்டேன். என் பிரச்சினைகளை எல்லாம் கடவுளிடம் ஒப்படைத்து விட்டு எனது பயணத்தை தொடர்வேன்.

 ஸ்லிம்...ரகசியம்

ஸ்லிம்...ரகசியம்

அதிகமா வெயிட் போடுற சாப்பாட்டைச் சாப்பிட மாட்டேன். ஆனா, ஹைதராபாத் போனா பிரியாணி சாப்பிடாமா இருக்க மாட்டேன். பிரியாணினா எனக்கு அவ்ளோ பிடிக்கும். அதே அளவுக்கு நல்ல கும்மிருட்டுல மெரினா பீச்ச ரசிக்கறதும் பிடிக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Actress Priya AnandActress Priya Anand made her debut as heroine through the Tamil film Vaamanan. She continued to act in films 180 and Pugaippadam. Though she became popular after acting the film English Vinglish, her Tamil film Ethir Neechal gave her recognition. Now she is currently acting in Arima Nambi, Vanakkam Chennai and Vai Raja Vai.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more