பண்ண வேண்டிய நேரத்தில் பண்ணுவேன்.. திருமணம் பற்றிய கேள்விக்கு பிரியா பவானி சங்கர் நச் பதில்!

சென்னை: அருண் விஜய்யின் யானை படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள பிரியா பவானி சங்கர் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

செய்தியாளர், சின்னத்திரை நடிகையாக இருந்த பிரியா பவானி சங்கர் மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்நிலையில், திருமணம் பற்றிய கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது

ஹோம்லி லுக்

ஹோம்லி லுக்

இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானாவர் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த இவர், விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் நடித்து வந்த நிலையில், படிப்படியாக சீரியலில் இருந்து சினிமா ஹீரோயினாக அப்கிரேட் ஆனார். தொடர்ந்து ஹோம்லி லுக்கில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பிரியா பவானி சங்கர்.

யானை தந்த வெற்றி

யானை தந்த வெற்றி

கடைக்குட்ட் சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், கசட தபற, ஓ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பிரியா பவானி சங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறி உள்ளது. இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய்யின் ஆக்‌ஷனில் உருவான யானை திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

யானை படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள திருச்சிற்றம்பலம் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர். சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் தாய்க் கிழவி பாடலில் தனுஷ், நித்யா மேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் இடம் பெற்றிருந்தனர். இந்தியன் 2 படத்திலும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பண்ணும் போது பண்ணுவேன்

பண்ணும் போது பண்ணுவேன்

இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரியா பவானி சங்கரிடம் திருமணம் செய்து கொள்வீர்களா? என்கிற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், பண்ணும் போது பண்ணுவேன் என பதில் அளித்துள்ளார். மேலும், சுதந்திரமான பெண் என்றால் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற எந்த அர்த்தமும் இல்லை. சுதந்திரமான பெண் என்பதற்காக அப்பா, அம்மா இல்லாமலா இருக்கிறோம், அதே போல திருமணம் செய்து கொண்டாலும், கணவருடனும் சுதந்திரமாக இருக்க முடியும் எனக் கூறியுள்ளார்.

10 வருட காதல்

10 வருட காதல்

நடிகையாவதற்கு முன்பாக இருந்தே தனது நெருங்கிய நண்பர் ராஜ் என்பவரை பிரிய பவானி சங்கர் காதலித்து வருகிறார். மான்ஸ்டர், பொம்மை என தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யா படங்களில் நடித்து வந்த நிலையில், இருவருக்கும் காதலா? என கிசுகிசுக்கத் தொடங்கிய நிலையில், தனது காதலரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகம் செய்திருந்தார் பிரியா பவானி சங்கர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X