»   »  டிவி சீரியலில் நடித்து உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் பிரியங்கா சோப்ரா

டிவி சீரியலில் நடித்து உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் பிரியங்கா சோப்ரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: உலக அளவில், அதிக சம்பளம் வாங்கும், 'டிவி' சீரியல் நடிகையர் பட்டியலில், பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, 34, எட்டாவது இடம்பிடித்துள்ளார். இவரது ஆண்டு வருமானம் 1.10 கோடி டாலராக உள்ளது.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும், போர்ப்ஸ் பத்திரிகை, உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும், டிவி நடிகையரின் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், பாலிவுட் நடிகையும், குவாண்டிகோ என்ற பெயரில், அமெரிக்க சேனலில் ஒளிபரப்பாகும், டிவி தொடரில் நடிப்பவருமான பிரியங்கா சோப்ரா, எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

டிவி தொடரில் நடித்ததன் மூலம் இந்தாண்டில்,74 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த பட்டியலில் இடம்பெறும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

டிவி நடிகைகளின் வருமானம்

டிவி நடிகைகளின் வருமானம்

அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ், ஆண்டு வருவாய் அடிப்படையில் உலகில் முன்னணி டி.வி நடிகைகள் 15 பேர் அடங்கிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் முதல் இந்திய நட்சத்திரமாக பிரியங்கா சோப்ரா இடம் பிடித்துள்ளார்.

முதலிடத்தில் சோபியா

முதலிடத்தில் சோபியா

அமெரிக்க டி.வி. நடிகையான சோபியா வெர்காரா,44 இந்த பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். இவரது ஆண்டு வருவாய் 4.3 கோடி டாலராகும்.

நடிகைகள் சம்பளம்

நடிகைகள் சம்பளம்

"தி பிக் பாங் தியரி" டி.வி. தொடரின் நடிகை கலே குயோகோ, 2.45 கோடி டாலர் வருவாயுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 1.5 கோடி டாலர் வருவாயுடன் மிண்டி கலிங் 3வது இடத்தில் உள்ளார். எல்லன் பாம்பியோ மற்றும் மாரிஸ்கா ஹர்கிட்டே ஆகிய டி.வி நடிகைகள் தலா 1.45 கோடி டாலர் வருவாய் ஈட்டி 4வது இடத்தை பிடித்துள்ளனர்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா இந்த பட்டியலில் 8வது இடத்தில் இருக்கிறார். இவரது ஆண்டு வருமானம் 1.10 கோடி டாலராக உள்ளது. இவர் அமெரிக்காவில் குவாண்டிகோ டி.வி. தொடரில் நடித்து புகழ் பெற்றுள்ளார். 1.35 கோடி டாலர் வருவாயுடன் ஆறாவது இடத்தில் கெர்ரி வாஷிங்டன் உள்ளார். ஸ்டனா கேட்ரிக் ஏழாவது இடத்தில் இருக்கிறார். இவரும் பிரியங்கா சோப்ரா போலவே முதன் முதலில் இப்பட்டியலில் இடம் பெறும் பிரபல டி.வி. நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Priyanka Chopra has become the first Indian star to enter the Forbes list of highest paid television actresses in the world, after starring on American series “Quantico”.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil