»   »  வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபருடன் விருந்து சாப்பிடும் பிரியங்கா சோப்ரா?

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபருடன் விருந்து சாப்பிடும் பிரியங்கா சோப்ரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்செல்ஸ்: இந்தி நடிகையான பிரியங்கா சோப்ராவிற்கு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் விருந்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த வருடம் பிரியங்காவிற்கு பிரமாதமான ஆண்டு என்றே கூறலாம். அந்தளவிற்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் அவரின் வாழ்வில் நடைபெற்று வருகின்றன.

Priyanka Chopra invited by Barack Obama for Dinner

ஹாலிவுட் படமான 'பேவாட்ச்'சில் நடிக்கும் வாய்ப்பு, ஆஸ்கர் விழாவில் விருது வழங்குபவராக கலந்து கொண்டது போன்றவை உலகளவில் பிரியங்காவின் புகழை பரவச் செய்துள்ளன.

இந்நிலையில் மற்றுமொரு அதிர்ஷ்டமும் இவருக்கு கிடைத்துள்ளது. வெள்ளை மாளிகையில் மனைவியுடன் இணைந்து பராக் ஒபாமா அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ளுமாறு, பிரியங்காவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிராட்லி கூப்பர், லூசி லியூ, ஜேன் போண்டா, கிளாடிஸ் நைட் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் இணைந்து, இந்த விருந்தில் பிரியங்கா கலந்து கொள்ளவிருக்கிறார்.

பிரபலங்கள் தவிர்த்து முக்கியமான அரசு அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களும் இந்த விருந்தில் கலந்து கொள்கின்றனர்.

English summary
Quantico and Baywatch, Priyanka Chopra makes headlines for yet another mega international event of hers. Buzz is that the actress might soon be dining with the President of United States of America, Barack Obama.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil