»   »  வீடு தேடி வந்த ரூ.30 கோடி வாய்ப்பை ஏற்க மறுத்த நடிகை பிரியங்கா சோப்ரா

வீடு தேடி வந்த ரூ.30 கோடி வாய்ப்பை ஏற்க மறுத்த நடிகை பிரியங்கா சோப்ரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடிக்க ரூ.30 கோடி தருகிறோம் என்று கூறியும் நடிக்க மறுத்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. அவர் நடிப்பதுடன் பாடவும் செய்கிறார். ஹீரோயினாக நடிப்பதுடன் அவர் பிற நடிகைகளின் படங்களில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டமும் போட்டு வருகிறார். பாலிவுட்டில் குத்துப்பாட்டுக்கு ஆட நடிகைகள் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகைகள் படங்கள் தவிர விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்கள். சிலர் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

பிரியங்கா

பிரியங்கா

பிரியங்கா சோப்ராவை டிவி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளுமாறு 3 டிவி சேனல்கள் கேட்டுள்ளன. அதில் ஒரு சேனல் ரூ.10 கோடி சம்பளம் தர முன்வந்துள்ளது.

ரூ.30 கோடி

ரூ.30 கோடி

ஒரு டிவி சேனல் ரூ.10 கோடி தர முன்வந்தது போன்றே மற்ற 2 டிவி சேனல்களும் பிரியங்காவுக்கு ரூ.10 கோடி சம்பளம் தர தயாரானது. ஆனால் பிரியங்கா அந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டார்.

பிசி

பிசி

பிரியங்கா தற்போது பாஜிராவ் மஸ்தானி படத்தில் நடித்து வருகிறார். இது தவிர அவர் ஹாலிவுட் டிவி சீரியலிலும் நடித்து வருகிறார். இதற்கிடையே பாடல்களும் பாடிக் கொண்டிருக்கிறார்.

டேட்ஸ் இல்லை

டேட்ஸ் இல்லை

படம், டிவி தொடர் என்று பிசியாக இருப்பதால் டிவி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ள டேட்ஸ் ஒதுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் பிரியங்கா சோப்ரா. தற்போது பிரியங்கா அவர் நடித்துள்ள தில் தக்னே தோ படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளார்.

யாராவது

யாராவது

ஒரு ஷோவில் கலந்து கொள்ள ரூ.10 கோடியா, மூன்று ஷோவுக்கு ரூ.30 கோடியா? இந்த பிரியங்காவுக்கு என்னாச்சு, இப்படி தேடி வந்த ரூ. 30 கோடியை திருப்பி அனுப்பிவிட்டாரே என்று பாலிவுட்டில் சிலர் தெரிவித்துள்ளனர்.

English summary
Priyanka Chopra reportedly rejected three TV shows which would have fetched her around 30 crores and the reason happens to be her tight schedule.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil