For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்னது.. விவாகரத்தா? இன்ஸ்டாவில் கணவரின் பெயரை நீக்கிய நடிகை பிரியங்கா சோப்ரா.. ஷாக்கில் ரசிகர்கள்!

  |

  லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் பெயரை திடீரென நீக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  நடிகை பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜயுடன் தமிழன் படத்தில் நடித்தார். தொடர்ந்து இந்திப் படங்களில் நடிக்க தொடங்கிய அவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

  ஏராளமான விருதுகளை குவித்துள்ள பிரியங்கா சோப்ராவுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது. குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார்.

  12வது திருமண நாள்.. என்றும் உன்னை தாங்குவேன் .. கணவரை நெகிழ வைத்த பாலிவுட் நடிகை ! 12வது திருமண நாள்.. என்றும் உன்னை தாங்குவேன் .. கணவரை நெகிழ வைத்த பாலிவுட் நடிகை !

  10 வயது இளையவர்

  10 வயது இளையவர்

  ஹாலிவுட்டிலும் கால் பதித்த பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்கள், வெப் சீரிஸ்கள் என படு பிஸியாக உள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனசை காதலித்து வந்தார்.

  கணவருடன் ஜாலி

  கணவருடன் ஜாலி

  இவர்கள் இருவரும் கடந்த 2018 ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் செம பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா கணவருடன் நேரத்தை செலவழிப்பதற்கும் தவறுவதில்லை. அடிக்கடி கணவருடன் நேரத்தை செலவழிக்கும் போட்டோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

  வீட்டில் முதல் தீபாவளி

  வீட்டில் முதல் தீபாவளி

  சமீபத்தில் பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனஸும் சேர்ந்து வீடு வாங்கினர். அந்த வீட்டில் தங்களின் முதல் தீபாவளியை கொண்டாடிய அவர்கள் அந்த போட்டோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டனர். இதுகுறித்து பதிவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா, "எங்கள் முதல் வீட்டில் நாங்கள் ஒன்றாக சேர்ந்து முதல் தீபாவளி கொண்டாடுகிறோம். இது எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும்"

  என் வீட்டிற்கு திரும்பியதை போல்

  என் வீட்டிற்கு திரும்பியதை போல்

  இந்த மாலை நேரம் மிகவும் சிறப்பாக இருக்க கடினமாக உழைத்த அனைவருக்கும் நன்றி. நீங்கள் என் தேவதைகள்." என குறிப்பிட்டிருந்தார். மேலும் "எங்கள் வீட்டையும் எனது கலாச்சாரத்தையும் கௌரவித்த அனைவருக்கும் ஆடை அணிந்தது மட்டுமல்லாமல், இரவு முழுவதும் நடனமாடியதன் மூலம், நான் வீட்டிற்கு திரும்பி வந்ததைப் போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியது.

  நன்றியுடனும் நிறைவாகவும் உள்ளது

  நன்றியுடனும் நிறைவாகவும் உள்ளது

  சிறந்த கணவர் மற்றும் பார்ட்னர் நிக் ஜோனாஸுக்கு, நீங்கள் கனவுகளை உருவாக்குகிறீர்கள். நான் உங்களை காதலிக்கிறேன். என் இதயம் மிகவும் நன்றியுடனும் நிறைவாகவும் இருக்கிறது என உருகி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார் நடிகை பிரியங்கா சோப்ரா.

  ரசிகர்கள் ஷாக்

  ரசிகர்கள் ஷாக்

  திருமணத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்கு பின்னால் கணவரின் சர் நேம்மான ஜோனஸை சேர்த்திருந்தார் நடிகை பிரியங்கா சோப்ரா. இந்நிலையில் தனது பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் பெயரை திடீரென நீக்கியுள்ளார் பிரியங்கா சோப்ரா. பிரியங்கா சோப்ரா கணவரின் பெயரை நீக்கியதை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

  மவுனம் கலைந்து

  மவுனம் கலைந்து

  உங்களுக்குள் விஷயங்கள் சரியாக செல்கிறதா? அல்லது ஏதும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதான என கேட்டு வருகின்றனர். நட்சத்திர தம்பதிகளாக உலகளவில் ரசிகர்களை பெற்றுள்ள இருவரும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. இதனால் பொறுமை இழந்துள்ள ரசிகர்கள் விரைவில் இருவரும் மவுனம் கலைந்து தெளிவு படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  Recommended Video

  Bigg Boss 5 ல Priyanka தான் Fun | Sunitha Gogoi Excluisive | Filmibeat Tamil
  பெயரை நீக்கிய சமந்தா

  பெயரை நீக்கிய சமந்தா

  சமீபத்தில் நடிகை சமந்தாவும் அவரது காதல் கணவருமான நாக சைதன்யா ஆகிய இருவரும் விவாகரத்து அறிவித்தனர். விவாகரத்து அறிவிப்புக்கு சில மாதங்கள் முன்பாக தனது பெயருக்கு பின்னால் இருந்த தனது கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனியை நீக்கினார் சமந்தா. அப்போதே விவாகரத்து செய்ய போகிறார்களா என்ற கேள்வி எழுந்தது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Actress Priyanka Chopra removes husband name from Insta. Fans asking her were things going well among them? Priyanka Chopra seeks divorce from Nick Jonas?
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X