Just In
- 3 min ago
ரஜினியின் 40 வது திருமண நாள்...உருக்கமாக வாழ்த்து பதிவிட்ட மகள் ஐஸ்வர்யா
- 35 min ago
20 வருடங்களுக்கு பிறகு நடிகர் சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகர்.. தீயாய் பரவும் தகவல்!
- 1 hr ago
போலி இ-மெயில் விவகாரம்.. கமிஷனர் அலுவலகத்தில் நேரில் ஆஜரான ஹிரித்திக் ரோஷன்.. பாலிவுட் பரபரப்பு!
- 2 hrs ago
ஆரம்பிக்கலாங்களா...இணையத்தை கலக்கும் கமலின் வித்தியாசமான போட்டோ
Don't Miss!
- Automobiles
2021ம் ஆண்டின் சிறந்த பைக் எது தெரியுமா? தமிழக தயாரிப்பிற்கு கிடைத்த புதிய அங்கீகாரம்... இது பெருமையான தருணம்!
- News
வேளாண் சட்டத்தை 3 வருஷத்துக்கு நிப்பாட்டுங்க; போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைங்க - பாபா ராம்தேவ்
- Sports
அவர்களின் உடற்மொழியே சரியில்லை... பிட்ச் மீதான குற்றச்சாட்டு... பதிலடி கொடுத்த கவாஸ்கர்
- Lifestyle
பெண்கள் கணவரிடம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் தகுதிகள்... உங்ககிட்ட இதுல ஒன்னாவது இருக்கா?
- Finance
டெஸ்லாவுக்கு போட்டியாக எலக்ட்ரிக் கார் தயாரிக்க திட்டமிடும் ஹூவாய்..!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
18 வயசுல உலக அழகி பட்டம்.. இப்போ 20 வருஷம் ஆகிடுச்சு.. ஃபீல் பண்ணும் பிரியங்கா சோப்ரா!
மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது உலக அழகி பட்டம் வாங்கிய புகைப்படத்தை பதிவிட்டு நெகிழ்ச்சி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் காதலர் தினத்தை கொண்டாடி வரும் வேளையில், நடிகை பிரியங்கா சோப்ரா 20 ஆண்டுகளுக்கு முன் தனக்கு கிடைத்த உலக அழகி பட்டம் குறித்து பதிவிட்டுள்ளார்.
18 வயதில் உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ராவுக்கு, எல்லாம் நேற்று நடந்தது போல தெரிகிறதாம்.
மேலும், இந்த புகைப்படத்தை பதிவிட்டு, பெண்களே நீங்களும் பெரிதாக கனவு காணுங்கள் உங்களால் சாதிக்க முடியும் என்ற அட்வைஸும் வழங்கி உள்ளார்.
ஜெயலலிதா வாழ்வில் நடந்த அந்த அரசியல் திருப்பச் சம்பவம்... 'தலைவி'க்காக அப்படியே உருவாக்கும் படகுழு
|
நேற்று நடந்தது போல
மாடலிங் துறையில் கலக்கி வந்த பிரியங்கா சோப்ரா, தனது 18வது வயதில் உலக அழகி பட்டத்தை தட்டிச் சென்றார். அதன் பின்னரே பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். 2000ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை பெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது திடீரென அந்த புகைப்படத்தை ஷேர் செய்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், எல்லாம் நேற்று நடந்தது போல இருக்கு என பதிவிட்டுள்ளார்.
|
பெண்களால் முடியும்
மேலும், அந்த ட்வீட்டுக்கு கீழே இன்னொரு கமெண்ட்டையும் நடிகை பிரியங்கா சோப்ரா பதிவிட்டுள்ளார். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். அவர்களின் கைகளில் பொறுப்புகள் கொடுக்கப்பட்டால், நிச்சயம் பெரிய மாற்றங்கள் நிகழும் என பதிவிட்டுள்ளார். அரசியலுக்கு வரும் ஐடியா ஏதாவது இருக்குமோ?
|
மை குயின்
சோனாலி போஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான தி ஸ்கை இஸ் பிங் படத்தில், பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். அந்த படத்தில் பிரியங்காவுக்கு ஜோடியாக ஃபர்கான் அக்தர் மற்றும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ஸைரா வாசிம் நடித்திருந்தனர். பிரியங்கா சோப்ராவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. பிரியங்காவின் இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர் மை குயின் என கமெண்ட் செய்துள்ளார்.
|
கனவு மெய்யானது
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, எவ்வளவு வருடங்கள் கடின உழைப்பை கொட்டி இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. கனவு மெய்யாகும் என்பதற்கு நீங்கள் தான் உதாரணம் என உலக அழகி பட்டம் வென்ற வீடியோவை ஷேர் செய்து இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.
|
டெஸி கேர்ள்
2018ம் ஆண்டு வெளியான மேக்ஸிம் ஹாட் மேகஸினில் நடிகை பிரியங்கா சோப்ரா செம்ம செக்ஸியாக உள்ளாடையுடன் கொடுத்த போஸ் அட்டை படத்தை அலங்கரித்து இருந்தது. அந்த புகைப்படத்தை ஷேர் செய்து, டெஸி கேர்ள் என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார். கவர்ச்சியான உடைகள் பிரியங்காவுக்கு கச்சிதமாக பொருந்தும் என்பது உலகம் அறிந்தது.
|
அழகு தேவதை
பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் படங்களிலும் நடிகை பிரியங்கா சோப்ரா அசத்தி வருகிறார். மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் நாயகியாக நடிக்க இறுதிகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. காதலர் தினமான இன்று இப்படி ஒரு ட்வீட் போட்டுள்ள பிரியங்கா சோப்ராவை ரசிகர்கள் அழகு தேவதை என வர்ணித்து வருகின்றனர்.